பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு கிடைக்குமா

Added : மே 05, 2021
Share
Advertisement
சென்னை:கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பணி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.'டிசம்பர் 3' மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாநில தலைவர் தீபக் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். குறிப்பாக முதுகு தண்டுவடம் பாதித்தோர், பார்வையற்றோர், தவழ்ந்து செல்லுவோர் அதிகம்

சென்னை:கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பணி விலக்கு அளிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

'டிசம்பர் 3' மாற்றுத்திறனாளிகள் அமைப்பின் மாநில தலைவர் தீபக் கூறியதாவது: மாற்றுத் திறனாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாகவே இருக்கும். குறிப்பாக முதுகு தண்டுவடம் பாதித்தோர், பார்வையற்றோர், தவழ்ந்து செல்லுவோர் அதிகம் பாதிக்கப்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது.

கடந்தாண்டு தொற்று அதிகரித்த போது மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு பணியில் விலக்கு அளிக்கப்பட்டது. அதேபோல் மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களின் உடல்நிலை குறைபாட்டையும் பாதுகாப்பையும் கருத்தில் வைத்து பணி விலக்கு அளிக்க அரசு முன்வர வேண்டும். இவ்வாறு தீபக் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X