மலையில் தீ: மூலிகைகள் சேதம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மலையில் தீ: மூலிகைகள் சேதம்

Added : மே 05, 2021
Share
வந்தவாசி:வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலையில் தீப்பிடித்ததால் அரிய வகை மூலிகை செடி கொடிகள் எரிந்து சேதமாகின.திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலை மீது அறநிலையத் துறைக்கு சொந்தமான தவளகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மலை மீது ஏறிச் செல்ல 65 லட்சம் ரூபாய் செலவில் 1 400 படிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மலையை ஒட்டியவாறு புலிவாய் வனப்பகுதி

வந்தவாசி:வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலையில் தீப்பிடித்ததால் அரிய வகை மூலிகை செடி கொடிகள் எரிந்து சேதமாகின.

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த வெண்குன்றம் மலை மீது அறநிலையத் துறைக்கு சொந்தமான தவளகிரீஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு மலை மீது ஏறிச் செல்ல 65 லட்சம் ரூபாய் செலவில் 1 400 படிகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இந்த மலையை ஒட்டியவாறு புலிவாய் வனப்பகுதி உள்ளது.நேற்று முன்தினம் இரவு இம்மலையில் திடீரென தீப்பிடித்தது.

இதில் மலையிலுள்ள அரிய வகை மூலிகை செடிகள்கொடிகள் எரிந்து சேதமாகின. தகவலின்படி வந்த வந்தவாசி தீயணைப்பு துறை மற்றும் வனத்துறையினர் தீயை அணைத்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். மலை மீது சென்றவர்களில் புகைப்பிடிப்போர் நெருப்பை அணைக்காமல் வீசி சென்றிருக்கலாம் என வனத்துறையினர் கூறுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X