குப்பை வண்டியில் பிணம் மஹாராஷ்டிராவில் அவலம்

Added : மே 05, 2021
Share
Advertisement
அவுரங்காபாத்:மஹாராஷ்டிராவில், ஆம்புலன்ஸ் கிடைக்காததால், இறந்தவர் உடலை குப்பை வண்டியில் ஏற்றி, மயானத்துக்கு எடுத்துச் சென்றனர்.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள ஒஸ்மனாபாத் மாவட்டம், கின்ஹி கிராமத்தை சேர்ந்த ஒருவர், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், நேற்று முன்தினம், தனியார்

அவுரங்காபாத்:மஹாராஷ்டிராவில், ஆம்புலன்ஸ் கிடைக்காததால், இறந்தவர் உடலை குப்பை வண்டியில் ஏற்றி, மயானத்துக்கு எடுத்துச் சென்றனர்.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா - தேசியவாத காங்கிரஸ் - காங்., கூட்டணி ஆட்சி நடக்கிறது.இங்குள்ள ஒஸ்மனாபாத் மாவட்டம், கின்ஹி கிராமத்தை சேர்ந்த ஒருவர், உடல் நிலை பாதிக்கப்பட்டதால், நேற்று முன்தினம், தனியார் டாக்டரிடம் சென்றார். கிளினிக் வாயிலேயே, அவர் மயங்கி விழுந்து இறந்தார்.

இது பற்றி போலீசாருக்கு, டாக்டர் தகவல் கொடுத்தார். அரசு டாக்டர்களுடன், போலீசார் வந்தனர். மயங்கி விழுந்து இறந்தவர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவரது உடல், கின்ஹி பஞ்சாயத்து தலைவர் ஹெக்டேவிடம் ஒப்படைக்கப்பட்டது. உடலை மயானத்துக்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. டாக்சி, ஆட்டோ, சைக்கிள் ரிக் ஷா ஓட்டுனர்களும், தொற்று பயத்தால், உடலை ஏற்றிச் செல்ல மறுத்து விட்டனர். வேறு வழியின்றி, குப்பை வண்டியில் உடலை ஏற்றி, மயானத்துக்கு எடுத்துச் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X