பொது செய்தி

தமிழ்நாடு

கேன்சரை தடுக்கும் 'காபி'

Added : மே 05, 2021
Share
Advertisement
காபி என்றாலே பலருக்கும் பிடிக்கும். பெரும்பாலானோரின் தினசரி வாழ்வில் காபி தர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. காலையில் இருந்து இரவு வரை நிறைய முறை காபி குடிப்பவர்களும் சிலர் உள்ளனர்.இந்நிலையில் காபி குடிப்பதால் புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் 16 சதவீதம் அதிகரிக்கிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டன்
 கேன்சரை தடுக்கும் 'காபி'



காபி என்றாலே பலருக்கும் பிடிக்கும். பெரும்பாலானோரின் தினசரி வாழ்வில் காபி தர்க்க முடியாத இடத்தை பெற்றுள்ளது. காலையில் இருந்து இரவு வரை நிறைய முறை காபி குடிப்பவர்களும் சிலர் உள்ளனர்.

இந்நிலையில் காபி குடிப்பதால் புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான வாய்ப்பு குறைகிறது. உயிர்வாழ்வதற்கான வாய்ப்புகள் 16 சதவீதம் அதிகரிக்கிறது என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது பிரிட்டன் மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது.

புரோஸ்டேட் கேன்சர் என்பது சிறுநீர் பாதையை ஒட்டி ஏற்படும் பாதிப்பு. இது 40 வயதிற்குறைவான ஆண்களில் அரிதாகவும், 60 வயதுக்கு மேலான ஆண்களுக்கு 50 சதவீதமும், 70-80 வயதுக்குட்டப்பவர்களுக்கு அதிகளவிலும் ஏற்படலாம். பிரிட்டனில் இது ஒரு பொதுவான பிரச்னையாக உள்ளது. ஆண்டுக்கு 47,500 ஆண்கள் இதனால் பாதிப்படைகின்றனர்.

சினா மருத்துவக்கல்லூரி நடத்திய ஆய்வில் தினமும் காபி குடிப்பவர்களுக்கு புரோஸ்டேட் கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் 9 சதவீதம் குறைவு. இதில் அதிகளவில் காபி குடிக்கும் பழக்கம் உள்ளவர்களுக்கு புரோஸ்டேட் கேன்சர் ஏற்படுவதற்கு வாயப்புகள் 2 சதவீதம் குறைவு. காபி தொடர்பான 16 விதமான ஆய்வுகளை ஒருங்கிணைத்து ஆய்வு செய்ததில் இதை தெரிவித்துள்ளனர்.

புரோஸ்டேட் கேன்சரால் பாதிக்கப்பட்ட 57,732 பேர் உட்பட லட்சக்கணக்கான ஆண்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டிருந்தது. இது ஒரு நாளைக்கு இரு முறை காபி குடிப்பது தொடங்கி 9 முறை குடிப்பவர்கள் வரை பங்கேற்றிருந்தனர்.

பொதுவாக காபி அதிகமுறை குடிப்பது உடலநலத்துக்கு நல்லதல்ல, ஆனால் இது கல்லீரல், குடல் மற்றும் மார்பக புற்றுநோய் பாதிப்புக்கான வாய்ப்புகளை குறைக்கிறது என ஆய்வு தெரிவிக்கிறது. ஆனால் புரோஸ்டேட் கேன்சர் நோயாளிகளிடம் இது எந்தளவுக்கு நன்மையை அளித்துள்ளது என்பதற்கு போதுமான ஆதாரம் வெளியிடப்படவில்லை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X