சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பல லட்சம் ரூபாய் ஐம்பொன் சிலை மீட்பு: கோயிலில் திருடப்பட்டதா: போலீஸ் விசாரணை

Added : மே 05, 2021
Share
Advertisement
வெள்ளகோவில்:வெள்ளகோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது; இதுதொடர்பாக, ஒருவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்; அப்போது, மாந்தபுரத்தை சேர்ந்த ரமேஷ், 37 என்பவரை, சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்; அவரது பையில், 17 செ.மீ., உயரம், ௧ கிலோ, 600 கிராம் எடையுள்ள ஐம்பொன்
 பல லட்சம் ரூபாய் ஐம்பொன் சிலை மீட்பு: கோயிலில் திருடப்பட்டதா: போலீஸ் விசாரணை

வெள்ளகோவில்:வெள்ளகோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான ஐம்பொன் சிலை மீட்கப்பட்டது; இதுதொடர்பாக, ஒருவரை கைது செய்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

திருப்பூர் மாவட்டம், வெள்ளகோவிலில், போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டனர்; அப்போது, மாந்தபுரத்தை சேர்ந்த ரமேஷ், 37 என்பவரை, சந்தேகத்தின் பேரில் விசாரித்தனர்; அவரது பையில், 17 செ.மீ., உயரம், ௧ கிலோ, 600 கிராம் எடையுள்ள ஐம்பொன் சரஸ்வதி சிலை இருந்தது.டி.எஸ்.பி., தனராசு தலைமையிலான, ஓ.சி.ஐ.யூ.,( திட்டமிட்ட குற்றங்கள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு) போலீசார், ரமேஷிடம் விசாரித்தனர்.

கரூரை சேர்ந்த பெண் ஒருவருடன் சேர்ந்து, கோவை மாவட்டம், சூலுாரில், ஒரு ஆண்டுக்கு முன்பு ஒருவரிடம் இருந்து இந்த சிலையை வாங்கியதாகவும் 'இது கோயிலில் திருடப்பட்ட சிலை; பல லட்சம் ரூபாய் மதிப்பு வாய்ந்தது' என்றும் ரமேஷ் போலீசாரிடம் தெரிவித்துள்ளார். சிலையை பறிமுதல் செய்து போலீசார் விசாரிக்கின்றனர்.

சிலையில் ஒரு கை மற்றும் வீணை வெட்டப்பட்டுள்ளது.எம்.பி.ஏ., பட்டதாரியான ரமேஷ், கல்லுாரி ஒன்றில் பேராசிரியராக பணியாற்றியவர்; எட்டு ஆண்டாக வெள்ளகோவில் யூனியன் அலுவலகத்தில் தற்காலிக பணியாளராகவும் பணிபுரிந்துள்ளார். சிலையை வாங்கியதாக கூறப்படும் கரூரைச் சேர்ந்த பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X