பொது செய்தி

தமிழ்நாடு

'கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் கட்டாயமல்ல'

Added : மே 05, 2021
Share
Advertisement
சென்னை:''பொது மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றின் எண்ணிக்கை முழுமையாக குறையும்'' என தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.உலக சுகாதார நிறுவனம் தெற்கு ரயில்வே பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் இணைந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியருக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை
 'கொரோனா நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் கட்டாயமல்ல'

சென்னை:''பொது மக்களின் முழு ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கொரோனா தொற்றின் எண்ணிக்கை முழுமையாக குறையும்'' என தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் கூறினார்.

உலக சுகாதார நிறுவனம் தெற்கு ரயில்வே பொது சுகாதாரத் துறை இயக்குனரகம் சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் இணைந்து சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பயணியருக்கு கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.

இந்நிகழ்ச்சிக்கு பொது சுகாதாரத் துறை இயக்குனர் செல்வ விநாயகம் தலைமை வகித்து கொரோனா விழிப்புணர்வு தொடர்பான வாசகங்கள் அடங்கிய பதாகைகள் வீடியோக்களை வெளியிட்டார்.பின் நிருபர்களிடம் கூறியதாவது:

கொரோனா நோயாளிகளுக்கு 'ரெம்டெசிவிர்' மருந்து கட்டாயம் அல்ல. அரசு மருத்துவ மனை களில் ரெம்டெசிவிர் மருந்து போதிய அளவில் இருப்பு உள்ளது. தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் பொது மக்களிடம் ரெம்டெசிவிர் மருந்து கேட்டு அலைக்கழிக்க கூடாது. பொதுமக்கள் அவசியமில்லாமல் இம்மருந்துக்கு காத்திருக்க தேவையில்லை.

தமிழகம் முழுதும் உள்ள முக்கிய மருத்துவமனைகளுக்கு ரெம்டெசிவிர் மருந்தை வினியோகிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தமிழகத்தில் 18 வயது நிரம்பிய அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடுவதற்கு 1.50 கோடி தடுப்பூசிகள் கேட்கப்பட்டுள்ளன. கிடைத்ததும் தடுப்பூசி போடும் பணி துவங்கும்.

தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதித்ததன் காரணமாக கொரோனா பரவல் சற்று குறைந்து உள்ளது. பொது மக்களின் ஒத்துழைப்பு இருக்கும் பட்சத்தில் முழுமையாக தொற்று பரவல் குறையும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X