சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை அரசு மருத்துவமனையில் ரெம்டெசிவிர் மருந்து திருட்டு: 3 பேரிடம் விசாரணை

Added : மே 05, 2021
Share
Advertisement
மதுரை:மதுரை அரசு கொரோனா மருத்துவ மனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் திருடப்பட்டது குறித்து நர்ஸ் உட்பட மூவரிடம் விசாரணை நடக்கிறது.கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு ரெம்டெசிவிர் மருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இம்மருந்துக்கு 'டிமாண்ட்' அதிகரித்துள்ள நிலையில் வெளிச்சந்தையில் ஒரு குப்பி (வயல்) ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை

மதுரை:மதுரை அரசு கொரோனா மருத்துவ மனையில் 8 ரெம்டெசிவிர் மருந்து பாட்டில்கள் திருடப்பட்டது குறித்து நர்ஸ் உட்பட மூவரிடம் விசாரணை நடக்கிறது.

கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டோருக்கு ரெம்டெசிவிர் மருந்தும் வழங்கப்பட்டு வருகிறது. இம்மருந்துக்கு 'டிமாண்ட்' அதிகரித்துள்ள நிலையில் வெளிச்சந்தையில் ஒரு குப்பி (வயல்) ரூ.10 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. இதனால் அரசே தற்போது இம்மருந்தை நோயாளிகளுக்கு குறைந்த விலையில் விற்று வருகிறது. பலர் இம்மருந்தை அரசிடம் வாங்கி வெளிசந்தையில் கூடுதல் விலைக்கு விற்கின்றனர். சென்னையில் டாக்டர் உட்பட சிலர் கைது செய்யப்பட்டனர்.

மதுரையில் இம்மருந்துக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில் அரசு கொரோனா மருத்துவ மனையில் 8 குப்பிகள் திருடுபோயுள்ளன. நேற்று முன்தினம் இரவு நர்ஸ் கேட்டதன்பேரில் தற்காலிக ஊழியர் மூலம் முதல் தளத்தில் உள்ள வார்டுக்கு, மருந்து கிடங்கு பொறுப்பாளர் ரெம்டெசிவிர் 9 மருந்து பாட்டில்களை கொடுத்து அனுப்பினார். நர்ஸ் இல்லாததால் டேபிளில் வைத்துவிட்டு ஊழியர் வந்துவிட்டார்.

சிறிது நேரம் கழித்து மருந்து கிடங்கு பொறுப்பாளரை தொடர்பு கொண்ட நர்ஸ், '8 பாட்டில்களின் பெட்டி காலியாக உள்ளது. மருந்து பாட்டில் இல்லை. ஒரு பெட்டியில் மட்டும் மருந்துடன் அதுவும் உடைந்த நிலையில் பாட்டில் உள்ளது' என்று கூறினார். தான் மருந்தோடு அட்டை பெட்டியை கொடுத்ததாக பொறுப்பாளர் கூற, தற்காலிக ஊழியர் மீது சந்தேகம் எழுந்தது. அவரோ, 'பாட்டில்கள் கொண்ட அட்டை பெட்டியை டேபிளில் வைத்துவிட்டு வந்தேன். அதில் மருந்து இருந்ததா, இல்லையா என தெரியவில்லை' என்றார்.

நர்ஸிடம் விசாரித்தபோது, 'நான் ஊசி போட அட்டை பெட்டியை திறந்தபோதுதான் மருந்து இல்லை எனத்தெரிந்தது' என்றார். மருந்து பாட்டில்களை கண்டுபிடித்துத்தருமாறு மதிச்சியம் போலீசில் உதவி நிலைய மருத்துவ அலுவலர் சையது அப்துல்காதர் 52, புகார் செய்தார். நர்ஸ், தற்காலிக ஊழியர், கிடங்கு பொறுப்பாளரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர். கண்காணிப்பு கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர். மருத்துவமனை தரப்பில் விசாரிக்க குழு ஒன்றை டீன் சங்குமணி நியமித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X