கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஸ்ரீரங்கம் கோயில் கடைகளை காலி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவு

Added : மே 05, 2021
Share
Advertisement
மதுரை:திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகே உள்ள சில கடைகளை காலி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாக கடைகளில் 2018 ல் தீ விபத்து ஏற்பட்டது. இதையொட்டி கோயில்களின் வளாகம் மற்றும் அருகில் உள்ள கடைகளை அகற்ற அரசு முடிவெடுத்தது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் அருகே சில கடைகள் காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை

மதுரை:திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் அருகே உள்ள சில கடைகளை காலி செய்ய உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாக கடைகளில் 2018 ல் தீ விபத்து ஏற்பட்டது. இதையொட்டி கோயில்களின் வளாகம் மற்றும் அருகில் உள்ள கடைகளை அகற்ற அரசு முடிவெடுத்தது. திருச்சி ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயில் அருகே சில கடைகள் காலி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை எதிர்த்து சிலர் உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தனர்.

தனி நீதிபதி, 'கோயிலுக்கு சொந்தமான மண்டபத்தில் மனுதாரர்கள் கடைகள் நடத்துகின்றனர். அது பாரம்பரிய மதிப்புமிக்க கட்டடம். இதில் வணிக நடவடிக்கைகளை அனுமதித்தால் பாதிப்பு ஏற்படும். மனுக்களை தள்ளுபடி செய்கிறேன்,' என்றார். இதை எதிர்த்து சிலர் மேல்முறையீடு செய்தனர்.

நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. மனுதாரர்கள் தரப்பு, 'கோயிலுக்கு வெளியே ஒரு கி.மீ.,துாரத்தில் பிரதான சாலையில் கடைகள் அமைந்துள்ளன. இதனால் கோயில் அல்லது பக்தர்களுக்கு எவ்வித இடையூறும் இல்லை. பல தலைமுறைகளாக வாடகைக்கு கடைகளை நடத்துகிறோம். அகற்றினால் எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கும்,' என தெரிவித்தது.

நீதிபதிகள் உத்தரவு: மனுதாரர்களுக்கு ஒதுக்க கோயில் தரப்பில் மாற்று இடம் இல்லை என்பது தெளிவாகிறது. இச்சூழ்நிலையில் மாற்று இடம் ஒதுக்க கோயில் நிர்வாகத்தை கட்டாயப்படுத்த முடியாது. மனுதாரர்கள் 2018 டிச.,31 க்குள் கடைகளை காலி செய்வதாக ஏற்கனவே உத்தரவாதம் அளித்துள்ளனர். அக்காலகட்டத்தைத் தாண்டி தொடர எப்படி அனுமதிக்க முடியும் என கேள்வி எழுகிறது.

மனுதாரர்கள் மே 30 க்குள் கடைகளை காலி செய்து கோயில் நிர்வாகத்திடம் ஒப்படைக்க வேண்டும். தவறினால் அகற்றுவதற்கு அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். தேவையெனில் போலீசார் பாதுகாப்பு அளிக்க வேண்டும். மனுக்களை தள்ளுபடி செய்கிறோம் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X