சம்பவம் செய்தி

தமிழ்நாடு

இரு தரப்பு மோதல் வாகனங்களுக்கு தீ வைப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
விருதுநகர்:விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சியில் இரு தரப்பு மோதலால் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பதற்றமான சூழலால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.விருதுநகர் வடமலைக்குறிச்சியை சேர்ந்த தங்கப்பாண்டியன் 43 என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாதவன் 38 என்பவருக்கும் 2011 உள்ளாட்சி தேர்தலில் இருந்து முன்விரோதம் உள்ளது. அந்த தேர்தலில் தங்கபாண்டியன் தரப்பில்
 இரு தரப்பு மோதல் வாகனங்களுக்கு தீ வைப்பு

விருதுநகர்:விருதுநகர் அருகே வடமலைக்குறிச்சியில் இரு தரப்பு மோதலால் வாகனங்களுக்கு தீ வைக்கப்பட்டது. பதற்றமான சூழலால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

விருதுநகர் வடமலைக்குறிச்சியை சேர்ந்த தங்கப்பாண்டியன் 43 என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மாதவன் 38 என்பவருக்கும் 2011 உள்ளாட்சி தேர்தலில் இருந்து முன்விரோதம் உள்ளது. அந்த தேர்தலில் தங்கபாண்டியன் தரப்பில் நிறுத்தப்பட்ட முனியசாமி ஊராட்சி தலைவராக வெற்றி பெற்றார்.

தங்கப்பாண்டியன் தரப்பை சேர்ந்த சவுந்தரபாண்டியன் என்பவரை மாதவன் தரப்பினர் கொலை செய்தனர். மாதவன் உள்ளிட்டோர் தற்போது சிறையில் உள்ளனர். தங்கப்பாண்டியன் மனைவியுடன் டூவீலரில் வடமலைகுறிச்சி வந்தபோது காரில் வந்த மர்மநபர்கள் மோதிவிட்டு தப்பி சென்றனர். இதில் தங்கப்பாண்டியனும், அவரது மனைவியும் காயங்களுடன் தப்பினர்.

ஆத்திரமடைந்த அவரது தரப்பினர் மாதவன் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பிருந்த டூவீலர்களுக்கு தீ வைத்தனர். இதில் மினி சரக்குவேன், மூன்று டூவீலர்கள் பலத்த சேதம் அடைந்தன. மாதவன் உறவினரான மணிமாறன் என்பவர் வீட்டிலும் தீ வைத்தனர்.டி.எஸ்.பி., அருணாசலம் நேரில் பார்வையிட்டார். பதட்டம் தவிர்க்க போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X