சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டிராவல்ஸ் அதிபர் கொலையில் மைத்துனர் உட்பட 3 பேர் கைது

Added : மே 05, 2021
Share
Advertisement
சென்னை:டிரான்ஸ்போர்ட் அதிபர் கொலை வழக்கில் அவரது மனைவியின் 'பாசக்கார' அண்ணன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.சென்னைமாங்காடு அடுத்த கோவூரைச் சேர்ந்தவர் பாஸ்கர் 37; டிரான்ஸ்போர்ட் நிறுவன அதிபர்.சில தினங்களுக்கு முன் பாஸ்கர் மற்றும் அவர் மனைவி உஷா 35 மற்றும் பிள்ளைகளை காணவில்லை என பாஸ்கரின் தாய் மாங்காடு காவல் நிலையத்தில் புகார்அளித்தார். போலீசார் வழக்கு

சென்னை:டிரான்ஸ்போர்ட் அதிபர் கொலை வழக்கில் அவரது மனைவியின் 'பாசக்கார' அண்ணன் உட்பட மூன்று பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னைமாங்காடு அடுத்த கோவூரைச் சேர்ந்தவர் பாஸ்கர் 37; டிரான்ஸ்போர்ட் நிறுவன அதிபர்.சில தினங்களுக்கு முன் பாஸ்கர் மற்றும் அவர் மனைவி உஷா 35 மற்றும் பிள்ளைகளை காணவில்லை என பாஸ்கரின் தாய் மாங்காடு காவல் நிலையத்தில் புகார்அளித்தார். போலீசார் வழக்கு பதிந்த நிலையில் சிக்கராயபுரம் கல்குவாரியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் பாஸ்கர் உடல் மீட்கப்பட்டது.

விசாரணையில் பாஸ்கரின் மனைவி அவரது அண்ணன் பாக்யராஜ் மற்றும் நண்பர்கள் இணைந்து பாஸ்கரை கொலை செய்தது தெரிந்தது.உஷாவை நேற்று முன்தினம் கைது செய்த போலீசார் பாக்யராஜ் மற்றும் அவரது நண்பர்களை தேடினர். நேற்று பாக்யராஜ் 39, அவரது நண்பர்கள் வெங்கடேசன் 40, கோகுல் 24, ஆகியோரை கைதுசெய்தனர்.

அவர்களிடம் விசாரித்ததில் பாஸ்கருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருப்பதாகக் கூறி உஷா சந்தேகப்பட்டதால் கணவன் மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டுள்ளது. சம்பவத்தன்று வழக்கம் போல் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த உஷா இரும்பு 'பைப்'பால் பாஸ்கர் தலையில் அடித்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் மயங்கியுள்ளார்.

பின் அவரது அண்ணன் பாக்யராஜை அழைத்துள்ளார்.தன் நண்பர்களுடன் வந்த பாக்யராஜ் மயங்கிய பாஸ்கரை சரமாரியாக தாக்கி கொலை செய்து உடலை காரில் எடுத்துச் சென்று கல்குவாரியில் வீசியுள்ளார். கொலையை மறைக்க ரத்தக் கறை படிந்த 'பெட்ஷீட்' மற்றும் தலையணையையும் குட்டையில் வீசி தலைமறைவானதாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X