சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பயிர் இன்சூரன்ஸ் கிடைக்காததால் விவசாயத்தை கைவிட்ட விவசாயிகள்

Added : மே 05, 2021
Share
Advertisement
சாக்கோட்டை:காரைக்குடி அருகே உள்ள திருவேலங்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்காத விரக்தியில் விவசாயிகள் கோடை விவசாயத்தை கைவிட்டனர். இதனால் பல ஏக்கர் நிலங்கள் தரிசாக காட்சியளிக்கிறது.சாக்கோட்டை ஒன்றியம்,தி.சூரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருவேலங்குடியில் 250 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.ஆண்டுதோறும் ஆடிப்பட்டத்தில் நெல்லும்
  பயிர் இன்சூரன்ஸ் கிடைக்காததால் விவசாயத்தை கைவிட்ட விவசாயிகள்

சாக்கோட்டை:காரைக்குடி அருகே உள்ள திருவேலங்குடியில் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் கிடைக்காத விரக்தியில் விவசாயிகள் கோடை விவசாயத்தை கைவிட்டனர். இதனால் பல ஏக்கர் நிலங்கள் தரிசாக காட்சியளிக்கிறது.

சாக்கோட்டை ஒன்றியம்,தி.சூரக்குடி ஊராட்சிக்கு உட்பட்ட திருவேலங்குடியில் 250 ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்படுகிறது.ஆண்டுதோறும் ஆடிப்பட்டத்தில் நெல்லும் சித்திரையில் மாற்றுப் பயிராக எள்ளும் சாகுபடி செய்யப்படுகிறது.போதிய மழையின்றி விவசாயம் பொய்த்து வந்த நிலையில், இம்முறை பெய்த கனமழையால் 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி அழுகியது. இதற்கு உரிய பயிர் இன்சூரன்ஸ் கிடைக்கவில்லை.

விரக்தியடைந்த விவசாயிகள் தற்போது விளைநிலங்களை தரிசாக போட்டுள்ளனர்.விவசாயி ராமு கூறுகையில்; இங்கு 250 ஏக்கரில் நெல் சாகுபடி நடக்கும்.ஆடியில் நெல் சாகுபடி செய்து சித்திரையில் எள் விதைப்போம். இம்முறை விவசாயிகள் கடன் வாங்கி நெல் சாகுபடி செய்தனர். ஆனால் தொடர் கனமழை காரணமாக 100 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியது. இதற்கான பயிர் இன்சூரன்ஸ் முறையாக வழங்கப்படவில்லை. இதனால் அச்சமடைந்த விவசாயிகள் கூட விவசாயத்தை கைவிட்டுள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X