தமிழ்நாடு

பாதிப்பு : ஓராண்டிற்கு முன் எரிந்த டிரான்ஸ்பார்மரால் : அடிக்கடி சிவகங்கை நகருக்கு மின் துண்டிப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
சிவகங்கை:சிவகங்கை நகர் பகுதியில் உள்ள மின் மாற்றி பழுதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீப்பற்றி எரிந்தது. அருகில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறுவதால் மின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.சிவகங்கை நகர் பகுதிக்கு மின் விநியோகம் செய்வதற்கான துணை மின் நிலையம் திருப்புத்துார் ரோட்டில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ளது. சிவகங்கை

சிவகங்கை:சிவகங்கை நகர் பகுதியில் உள்ள மின் மாற்றி பழுதால் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தீப்பற்றி எரிந்தது. அருகில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறுவதால் மின் விநியோகத்தில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை நகர் பகுதிக்கு மின் விநியோகம் செய்வதற்கான துணை மின் நிலையம் திருப்புத்துார் ரோட்டில் அனைத்து மகளிர் போலீஸ் ஸ்டேஷன் எதிரில் உள்ளது. சிவகங்கை பகுதிக்கு நாள் ஒன்றுக்கு 20 மெகாவாட் மின் விநியோகம் செய்யப்பட வேண்டும். தொழில் நுட்பக்கோளாறு காரணமாக ஒரு மின்மாற்றி தீப்பற்றி முழுவதுமாக எரிந்தது. இதனை மாற்றம் செய்ய 2 கோடி ரூபாய் வரை செலவிட வேண்டும்.

இன்று வரை எரிந்த மின் மாற்றி சரி செய்யப்படாமல் நிதிப்பற்றாக்குறை காரணமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதன் காரணமாக சிவகங்கை நகருக்கு மின் விநியோகம் செய்ய மதகுப்பட்டி, மானாமதுரை, காளையார்கோவில், அரசனுார் ஆகிய துணை மின் நிலையங்களில் உள்ள மின்மாற்றியிலிருந்து மின்சாரம் சிவகங்கை நகருக்கு விநியோகம் செய்யப்படுகிறது.

அருகில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்து சிவகங்கை நகருக்கு விநியோகிக்கும் துணை மின் நிலையத்தில் பழுது ஏற்படும்போது நகருக்குள் மின் விநியோகம் பாதிக்கப் படுகிறது.

சிவகங்கை மின் வாரிய மேற்பார்வை பொறியாளர் சகாயராஜ் தெரிவித்ததாவது:

சிவகங்கை துணை மின் நிலையத்தில் மின் மாற்றி தீப்பற்றி எரிந்ததில் ஒரு மின் மாற்றி செயல்படாமல் உள்ளதால் அருகில் உள்ள துணை மின் நிலையங்களில் இருந்துசிவகங்கை நகர் பகுதி, பகுதியாக மின் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.மின் மாற்றி பழுது நீக்க மதிப்பீடு செய்யப்பட்டு வாரியத்திற்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.அருகில் உள்ள துணை மின் நிலையங்களில் பழுது ஏற்படும் போது நகருக்குள் மின் விநியோகம் பாதிக்கப்பட்டு வருகிறது. விரைவில் சீரமைப்பு செய்து மின் விநியோகம் சீராகும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X