கொரோனா வார்டுக்கு ஆக்சிஜன் ப்ளோ மீட்டர் சிவகங்கையில் அதிகப்படுத்த முடிவு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா வார்டுக்கு ஆக்சிஜன் 'ப்ளோ மீட்டர்' சிவகங்கையில் அதிகப்படுத்த முடிவு

Added : மே 05, 2021
Share
சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகளில் 'ஆக்சிஜன் போர்ட்' 'ப்ளோ மீட்டர்' பொருத்த திட்டமிட்டுள்ளனர்.இங்குள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் 300 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை உட்பட 94 பேர்களுக்கு கொரோனா உறுதியானது.இங்கு வருவோரில் பலருக்கு கொரோனா 'நெகட்டிவ்' ரிசல்ட்

சிவகங்கை:சிவகங்கை அரசு மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டுகளில் 'ஆக்சிஜன் போர்ட்' 'ப்ளோ மீட்டர்' பொருத்த திட்டமிட்டுள்ளனர்.

இங்குள்ள கொரோனா சிறப்பு சிகிச்சை வார்டில் 300 க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். நேற்று பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை உட்பட 94 பேர்களுக்கு கொரோனா உறுதியானது.இங்கு வருவோரில் பலருக்கு கொரோனா 'நெகட்டிவ்' ரிசல்ட் வந்தாலும், நுரையீரல் பாதிப்பால் மூச்சு திணறல் ஏற்பட்டு இறப்பது அதிகரித்துள்ளது. இதை தவிர்க்க ஏற்கனவே உள்ள படுக்கைகளில் 'ஆக்சிஜன்' தடையின்றி கிடைக்க செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


ஆக்சிஜன் 'ப்ளோ' மீட்டர் வருகை



கொரோனா உறுதியாவோர் அதிகரித்து, சிவகங்கை அரசு மருத்துவமனைக்கு பலர் வருகின்றனர். அவர்களுக்கு மூச்சு திணறல் ஏற்பட்டால், உடனுக்குடன் 'ஆக்சிஜன்' வழங்கும் நோக்கில், கூடுதலாக படுக்கைகளில் ஆக்சிஜன் செல்லும் குழாய் பொருத்தவும் உள்ளனர். 200 இடங்களில் 'ஆக்சிஜன் போர்ட் கருவி' மற்றும் 'ஆக்சிஜன் ப்ளோ மீட்டர்' 100 பொருத்த உள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அரசு மருத்துவமனைகளில் கொரோனா லேசான அறிகுறி உள்ளோருக்கு சிகிச்சை அளிக்கவும் டாக்டர்களுக்கு பயிற்சி அளிக்கின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X