சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தேவகோட்டை ஆற்றில் சுண்ணாம்பு கல் கொள்ளை

Added : மே 05, 2021
Share
Advertisement
தேவகோட்டை:தேவகோட்டை மணிமுத்தாறு ஆற்றில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுண்ணாம்பு கல் திருடப்பட்டுள்ளது.தேவகோட்டை எல்லையில் உள்ள மணிமுத்தாறு 20 கி.மீ.துாரம் உள்ளது. நகர் பகுதியை யொட்டி இரண்டு கி.மீ., ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் கட்டடத்திற்கு உதவும் சுண்ணாம்பு சுக்கான் பாறை பாறையாக உள்ளது. சமீபத்தில் ஆற்றில் இருந்த முட்செடிகள் அகற்றப்பட்டது.இரண்டு நாட்களுக்கு முன்
 தேவகோட்டை ஆற்றில் சுண்ணாம்பு கல் கொள்ளை

தேவகோட்டை:தேவகோட்டை மணிமுத்தாறு ஆற்றில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுண்ணாம்பு கல் திருடப்பட்டுள்ளது.

தேவகோட்டை எல்லையில் உள்ள மணிமுத்தாறு 20 கி.மீ.துாரம் உள்ளது. நகர் பகுதியை யொட்டி இரண்டு கி.மீ., ஆறு செல்கிறது. இந்த ஆற்றில் கட்டடத்திற்கு உதவும் சுண்ணாம்பு சுக்கான் பாறை பாறையாக உள்ளது. சமீபத்தில் ஆற்றில் இருந்த முட்செடிகள் அகற்றப்பட்டது.இரண்டு நாட்களுக்கு முன் ஆற்றில் டிராக்டர் ஒன்று நின்றது. மணல் அள்ளப்படுவதாக நினைத்து அங்கு போலீசார் சென்றனர்.

அங்கு சுண்ணாம்பு கல் திருடுவது தெரியவந்தது.ஒரு யூனிட் சுண்ணாம்பு ரூ. 7 ஆயிரம் வரை விற்கும் நிலையில் , பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள சுண்ணாம்பு அனுமதி இன்றி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. அங்கிருந்த டிராக்டரை பறிமுதல் செய்த போலீசார் சுண்ணாம்பு கல் வெட்டி கும்பலை தேடி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X