சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் செங்கல் தயாரிக்க மூலப்பொருள் கிடைக்காமல் அவதி

Added : மே 05, 2021
Share
Advertisement
மானாமதுரை:மானாமதுரையில் செங்கல் தயாரிக்கும் மூலப்பொருட்கள் கிடைக்காமல் செங்கல் சேம்பர் உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.மானாமதுரையில் ஏராளமான செங்கல் காளவாசல்கள் உள்ளன.இவற்றில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கில் செங்கற்கள் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.மானாமதுரை பகுதியில் ஓடும் வைகை ஆற்றில் இருந்து கிடைக்கும் கரம்பை மண்

மானாமதுரை:மானாமதுரையில் செங்கல் தயாரிக்கும் மூலப்பொருட்கள் கிடைக்காமல் செங்கல் சேம்பர் உரிமையாளர்கள் தவித்து வருகின்றனர்.

மானாமதுரையில் ஏராளமான செங்கல் காளவாசல்கள் உள்ளன.இவற்றில் இருந்து தினந்தோறும் லட்சக்கணக்கில் செங்கற்கள் தயாரிக்கப்பட்டு தமிழ்நாடு முழுவதும் அனுப்பி வைக்கப்படுகிறது.

மானாமதுரை பகுதியில் ஓடும் வைகை ஆற்றில் இருந்து கிடைக்கும் கரம்பை மண் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கண்மாய்களில் இருந்து கிடைக்கும் சவுடு மணல் மற்றும் ஓடை மணல் ஆகியவற்றை கொண்டு தரமான செங்கல்கள் தயாரிக்கப்படுவதால்அனைத்து பகுதிகளிலிருந்தும் வீடுகள் கட்டுபவர்கள் இங்கு வந்து செங்கல்களை வாங்கி செல்கின்றனர்.

தற்போது செங்கல் தயாரிப்பதற்கு கண்மாய்களில் இருந்து சவடு மண் கிடைக்காமல் அவதிப் பட்டு வருகின்றனர். செங்கல் கேட்டு வரும் வாடிக்கையாளர்களுக்கு உரிய நேரத்தில் செங்கல் வழங்க முடியாமல் தவித்து வருகின்றனர்.

செங்கல் சேம்பர்,மற்றும் காளவாசல் உரிமையாளர்கள் கூறுகையில்,தற்போது ஆறு, கண்மாய், ஏரி,குளங்கள் ஆகியவற்றில் மணல் திருடர்கள் மணல் மற்றும் சவடு மணலை திருட்டுத்தனமாக கடத்தி வருவதால்,சேம்பர்களில் செங்கல் தயாரிக்க கண்மாய்களில் இருந்து சவடு மண் எடுப்பதற்கு அரசு சார்பில் ஏகப்பட்ட கெடுபிடி உள்ளது.

முறையாக விண்ணப்பித்து சவடு மண் அள்ள அனுமதி கேட்டால் உடனடியாக அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர்.இதனால் செங்கல் தயாரிக்க முடியாத நிலையில் உள்ளோம், மேலும் தற்போது தொழிலாளர்களும் கொரோனா தொற்று காரணமாக வேலைக்கு வருவதை தவிர்த்து வருவதால் அதிலும் சுணக்கம் ஏற்படுகிறது என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X