சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மானாமதுரையில் குடிநீர் திருட்டு

Added : மே 05, 2021
Share
Advertisement
மானாமதுரை:மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதி வீட்டு குழாய் இணைப்புகளில் சிலர் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதால் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் 4 ஆயிரம் குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. ராஜகம்பீரம் வைகை ஆற்று பகுதியில் இருந்து போர்வெல்லில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம்

மானாமதுரை:மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட பகுதி வீட்டு குழாய் இணைப்புகளில் சிலர் மின்மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பதால் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மானாமதுரை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளிலும் 4 ஆயிரம் குடிநீர் குழாய் இணைப்புகள் உள்ளன. ராஜகம்பீரம் வைகை ஆற்று பகுதியில் இருந்து போர்வெல்லில் இருந்து தண்ணீர் உறிஞ்சப்பட்டு அங்கிருந்து குழாய்கள் மூலம் மானாமதுரைக்கு தண்ணீர் சப்ளை செய்யப் படுகிறது.

மாரியம்மன் கோயில் தெரு,பழைய தபால் ஆபிஸ் தெரு, சுந்தரபுரம் கடைவீதி உள்ளிட்ட பல பகுதிகளில் குழாய் இணைப்புகளில் மின் மோட்டார் பொருத்தி குடிநீரை எடுத்து வருவதால் அந்த பகுதியில் உள்ள மற்ற குடிநீர் இணைப்புகளுக்கு குடிநீரே வருவதில்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.

பேரூராட்சி நிர்வாகத்தினர் மோட்டார் பொருத்தி குடிநீர் எடுப்பவர்கள் மீது எவ்வித பாரபட்சமும் காட்டாமல் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X