பொது செய்தி

தமிழ்நாடு

கோடை வெயிலை சமாளிக்க மானாமதுரையில் 'தயிர் குடுவை,டம்ளர்' விற்பனை அதிகரிப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தற்போது கோடைவெயிலை சமாளிக்க குளர்ச்சி தரக்கூடிய பானங்களையும்,இயற்கையான முறையில் குளுமையாக்கும் தயிர் குடுவை, கலயம், டம்ளர்கள் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது.மானாமதுரை குலாலர் தெருவில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்டபொருட்களை தயார் செய்து வருகின்றனர்.இவர்கள் சீசனிற்கு தகுந்தாற்போல் மண்கூஜாக்கள்,ஜாடிகள்,
 கோடை வெயிலை சமாளிக்க மானாமதுரையில் 'தயிர் குடுவை,டம்ளர்' விற்பனை அதிகரிப்பு

மானாமதுரை:சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் தற்போது கோடைவெயிலை சமாளிக்க குளர்ச்சி தரக்கூடிய பானங்களையும்,இயற்கையான முறையில் குளுமையாக்கும் தயிர் குடுவை, கலயம், டம்ளர்கள் விற்பனை அதிகரிக்க துவங்கியுள்ளது.

மானாமதுரை குலாலர் தெருவில் 250க்கும் மேற்பட்ட குடும்பங்கள் மண்பாண்டபொருட்களை தயார் செய்து வருகின்றனர்.இவர்கள் சீசனிற்கு தகுந்தாற்போல் மண்கூஜாக்கள்,ஜாடிகள், அடுப்புகள், சட்டிகள், பானைகள், கார்த்திகை விளக்குகள், தீச்சட்டிகள், கலயங்கள், தீர்த்த கலயங்கள்,அழகு பொருட்கள்,குருவி கூடு பானைகள்,டம்ளர்கள்,தட்டுகள், தயிர் குடுவைகள், டம்ளர்கள்,என விதவிதமான பொருட்களை கலை நயத்தோடு தரமான முறையில் தயார் செய்து வருகின்றனர்.

தற்போது ஏராளமானவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் சாப்பாட்டோடு தயிர் சேர்த்து வருகின்றனர்.இதனையும் இயற்கை முறையில் குளிர்ச்சியாக்க மானாமதுரையில் 'தயிர் குடுவை, கலயம், டம்ளர்கள்'அதிகளவில் தற்போது தயாரித்து அதனை விற்று வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X