பொது செய்தி

தமிழ்நாடு

கொரோனா பரவலை தடுக்க போலீஸ் திட்டம்விழிப்புணர்வுக்காக மட்டுமே அபராதம் விதிப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
சிவகங்கை:கொரோனா 2வது அலை வேகமாக பரவுவதால், மக்களை காக்கவே தளர்வுடன் கூடிய ஊரடங்கு, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட போலீசார் தண்டிக்கும் நோக்கமின்றி, மாஸ்க் அணிவதன் அவசியத்தை உணர்த்தவே, அபராதம் வசூலிக்கின்றனர்.இம்மாவட்டத்தில் 2020 ஏப்., முதல் கொரோனா பரவல் தொடங்கியது. சில மாத பாதிப்பு குறைவுக்கு பின், மீண்டும் 2021 ஏப்ரலில் 2 வது அலை

சிவகங்கை:கொரோனா 2வது அலை வேகமாக பரவுவதால், மக்களை காக்கவே தளர்வுடன் கூடிய ஊரடங்கு, மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

சிவகங்கை மாவட்ட போலீசார் தண்டிக்கும் நோக்கமின்றி, மாஸ்க் அணிவதன் அவசியத்தை உணர்த்தவே, அபராதம் வசூலிக்கின்றனர்.இம்மாவட்டத்தில் 2020 ஏப்., முதல் கொரோனா பரவல் தொடங்கியது. சில மாத பாதிப்பு குறைவுக்கு பின், மீண்டும் 2021 ஏப்ரலில் 2 வது அலை வேகமெடுத்துள்ளது. இது வரை இங்கு 8928 பேர் பாதிக்கப்பட்டு, 8058 பேர் குணமாகினர். தற்போது 734 பேர் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 136 பேர் பலியாகினர்.

இரண்டாவது அலை வேகத்தால், மேலும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறை தீவிர சிகிச்சை அளிக்கின்றனர். அதே நேரம் மாஸ்க் அணிதல், சமூக இடைவெளி கடைபிடித்தால் மட்டுமே, இதன் வேகத்தை கட்டுக்குள் வைக்க முடியும். இதற்காகவே அபராதம் வசூலிக்க போலீஸ், வருவாய், சுகாதாரத்துறை, உள்ளாட்சி துறைகளுக்கு அரசு உத்தரவிட்டது.


ரூ.47.26 லட்சம் அபராதம்:

அரசுக்கு அபராதம் வசூலிப்பது நோக்கம் அல்ல. நோய் பரவலை கட்டுக்குள் வைப்பது தான். ஏப்.,8 முதல் மே 4 வரை மாஸ்க் அணியாதோரிடம் தலா ரூ.200, சமூக இடைவெளி இல்லாதோரிடம் ரூ.500 என 23,130 பேர்களிடம் ரூ.47 லட்சத்து 26 ஆயிரத்து 500 அபராதத்தை வசூலித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X