தமிழ்நாடு

மஞ்சளாறு அணை குடிநீருக்கு திறப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
தேவதானப்பட்டி, மஞ்சளாறு அணையிலிருந்து நேற்று முதல் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி மற்றும் வத்தலக்குண்டு பேரூராட்சிக்கு குடிநீருக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு அணை மொத்த உயரம் 57 அடி. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வறட்டாறு, மூலாறு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர்

தேவதானப்பட்டி, மஞ்சளாறு அணையிலிருந்து நேற்று முதல் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, ஜி.கல்லுப்பட்டி மற்றும் வத்தலக்குண்டு பேரூராட்சிக்கு குடிநீருக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.தேவதானப்பட்டி அருகேயுள்ள மஞ்சளாறு அணை மொத்த உயரம் 57 அடி. மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்திலுள்ள தலையாறு, வறட்டாறு, மூலாறு பகுதியில் பெய்யும் மழையால் அணைக்கு நீர் வரத்து வரும். அணை நீரினால் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் 3148 ஏக்கர், திண்டுக்கல் மாவட்டத்தில் வத்தலக்குண்டு, நிலக்கோட்டை பகுதிகளில் 2111 ஏக்கர் என மொத்தம் 5259 ஏக்கர் நிலங்கள் பாசன பயன்பெறும். 2020 நவ.30ல் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. 2021 மார்ச் 30 வரை வழங்கப்பட்டது. நேற்று அணையின் நீர் மட்டம் 42.60 அடியாக இருந்தது. மழையளவு 12 மி.மீ.,இந்நிலையில் நேற்று காலை 8:00 மணி முதல் தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி பேரூராட்சி, ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி மற்றும் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பேரூராட்சிக்கு குடிநீருக்கு வினாடிக்கு 10 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X