சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பராமரிப்பில்லாத 'பல்லாங்குழி ரோடுகள்'

Added : மே 05, 2021
Share
Advertisement
திருப்புத்துார்:திருப்புத்துாரிலிருந்து மதுரை, காரைக்குடி, திண்டுக்கல் செல்லும் ரோடுகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.புதிய ரோடுகளின் விரிவுப் பணி மெதுவாக நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டதால், நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிப்பை கை விட்டனர்.தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் புதிய ரோடு அமைப்பில்

திருப்புத்துார்:திருப்புத்துாரிலிருந்து மதுரை, காரைக்குடி, திண்டுக்கல் செல்லும் ரோடுகள் தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாகி விட்டது.

புதிய ரோடுகளின் விரிவுப் பணி மெதுவாக நடந்து வருகிறது. தேசிய நெடுஞ்சாலையாக தரம் உயர்த்தப்பட்டதால், நெடுஞ்சாலைத்துறையினர் பராமரிப்பை கை விட்டனர்.தேசிய நெடுஞ்சாலை ஆணையமும் புதிய ரோடு அமைப்பில் கவனம் செலுத்துகிறதே தவிர பழைய ரோடு பராமரிக்க நடவடிக்கை எடுக்கவில்லை.இதனால் இப்பகுதியில்ரோடுகள் குண்டும் குழியுமாக பல்லாங்குழி ரோடுகளாகி' விட்டன.

இதனால் பல விபத்துக்கள் நடைபெறுகின்றன. பல முறை பொதுமக்கள் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை.தேசிய நெடுஞ்சாலைத்துறையினர் புதிய ரோடு முழுமையடையும் வரை காத்திராமல் தற்போது பயன்பாட்டில் உள்ள ரோடுகளை முழுமையாக பராமரிக்க முன் வர வேண்டியது அவசியமாகும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X