கனகாம்பரம் சாகுபடியை தவிர்க்கும் விவசாயிகள்

Added : மே 05, 2021
Share
Advertisement
போடி, போடியில் கனகாம்பரம் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் சாகுபடி செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். போடி ராசிங்காபுரம், சிலமலை, பெருமாள்கவுண்டன்பட்டி உட்பட சில கிராமங்களில் விவசாயிகள் கனகாம்பரம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அதற்கான சீசனாகும். நடப்பட்ட செடிகள் அதிகம் பூத்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை தட்டுப்பாடு நிலவியதால் கிலோ ரூ.500 முதல் ரூ.1000

போடி, போடியில் கனகாம்பரம் பூக்களுக்கு உரிய விலை கிடைக்காததால் சாகுபடி செய்வதை விவசாயிகள் தவிர்த்து வருகின்றனர். போடி ராசிங்காபுரம், சிலமலை, பெருமாள்கவுண்டன்பட்டி உட்பட சில கிராமங்களில் விவசாயிகள் கனகாம்பரம் சாகுபடி செய்துள்ளனர். தற்போது அதற்கான சீசனாகும். நடப்பட்ட செடிகள் அதிகம் பூத்துள்ளன. சில ஆண்டுகளுக்கு முன் வரை தட்டுப்பாடு நிலவியதால் கிலோ ரூ.500 முதல் ரூ.1000 வரை விற்கப்பட்டது. தற்போது அதன் தேவை குறைந்துள்ளதால் போதிய விலை கிடைக்கவில்லை. இதனால் பறிக்கப்படும் பூக்கள் கூலிக்கான செலவுக்கு மட்டுமே சரியாகிறது. விவசாயிகள் கூறியதாவது: கனகாம்பர செடிகளை ஒரு முறை நடவு செய்து பராமரித்து வந்தால் மூன்று ஆண்டுகள் வரையில் பலன் கிடைக்கும். தற்போது கிலோ ரூ.150 முதல் ரூ.200 வரை உள்ளது. இதனால் லாபம் இல்லை. ரூ.500 க்கு மேல் விற்றால்தால் லாபம் கிடைக்கும் என்பதால் பலரும் இச்சாகுபடியை தவிர்க்கின்றனர், என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X