பொது செய்தி

தமிழ்நாடு

வருங்கால வைப்பு நிதியில்விடுபட்ட தொகை செலுத்த உத்தரவு

Added : மே 05, 2021
Share
Advertisement
சிவகங்கை:சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிவிடுபட்டவைகளை உடனடியாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு உதவியாளர்கள், சமையலர், உதவி சமையலர் ஆகியோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு சம்பளத்தில் இருந்து வருங்காலவைப்பு நிதி பிடித்தம் செய்து அவர்களது கணக்கில் வரவு வைக்க வேண்டும். சம்பளத்தில் பிடித்த

சிவகங்கை:சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களின் வருங்கால வைப்பு நிதிவிடுபட்டவைகளை உடனடியாக செலுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் சத்துணவு உதவியாளர்கள், சமையலர், உதவி சமையலர் ஆகியோர் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு சம்பளத்தில் இருந்து வருங்காலவைப்பு நிதி பிடித்தம் செய்து அவர்களது கணக்கில் வரவு வைக்க வேண்டும். சம்பளத்தில் பிடித்த தொகை பல இடங்களில் செலுத்தப்படாமல் விடுபட்டுள்ளது. இதனை கண்காணிக்கசமூக நலத்துறை சார்பில் தனியாக இணையதள வசதி செய்யப்பட்டுள்ளது.

2019-20ம் ஆண்டுகளில் பல இடங்களில் சத்துணவு பணியாளர்களுக்கு வருங்கால வைப்பு நிதி விடுபட்டு நிலுவையாக உள்ளது. உடனடியாக நிலுவை தொகையை செலுத்திட வேண்டும், எனஅனைத்து கலெக்டர்களின் நேர்முக உதவியாளர்கள் சத்துணவு பிரிவு அதிகாரிகளுக்கு சமூகநலத்துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X