தமிழ்நாடு

மொட்டையடித்து சவாலை நிறைவேற்றிய வேட்பாளர் கேரளாவில் தோற்றவர் வினோதம்

Added : மே 05, 2021
Share
Advertisement
மூணாறுகேரளா உடும்பன்சோலை தொகுதியில் தோல்வியடைந்த காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இ.எம். அகஸ்தி, தனது தலையை மொட்டையடித்து சவாலை நிறைவேற்றினார்.கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் இ.எம். அகஸ்தி. தற்போது காங்., தேசிய குழு உறுப்பினராக உள்ளார். 1991 முதல் 2006 வரை இரு முறை உடும்பன்சோலை தொகுதியிலும், ஒருமுறை பீர்மேடு தொகுதியிலும் எம்.எல்.ஏ.வாக

மூணாறுகேரளா உடும்பன்சோலை தொகுதியில் தோல்வியடைந்த காங்கிரஸ் கூட்டணி வேட்பாளர் இ.எம். அகஸ்தி, தனது தலையை மொட்டையடித்து சவாலை நிறைவேற்றினார்.கேரளாவில் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் இ.எம். அகஸ்தி. தற்போது காங்., தேசிய குழு உறுப்பினராக உள்ளார். 1991 முதல் 2006 வரை இரு முறை உடும்பன்சோலை தொகுதியிலும், ஒருமுறை பீர்மேடு தொகுதியிலும் எம்.எல்.ஏ.வாக இருந்தார்.நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் இடுக்கி மாவட்டம் உடும்பன்சோலை தொகுயில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டைச் சேர்ந்த மின்துறை அமைச்சர் எம்.எம்.மணியை எதிர்த்து அகஸ்தி போட்டியிட்டார். அப்போது தேர்தலில் தோற்றால் தலையை மொட்டையடித்துக் கொள்வதாக சவால் விடுத்தார். தேர்தலில் மணி இவரைவிட 38,579 ஓட்டுகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார். தோல்வியடைந்த அகஸ்தி வேளாங்கண்ணி சர்ச்சிற்கு சென்று தலையை மொட்டையடித்து தனது சவாலை நிறைவேற்றினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X