தமிழ்நாடு

தண்ணீர் தேடி வரும் வன விலங்குகள்

Added : மே 05, 2021
Share
Advertisement
ஆண்டிபட்டி:ஆண்டிபட்டியில் மலை சார்ந்துள்ள வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் இரவில் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி தரைக்கு இறங்கி வருகின்றன.ஆண்டிபட்டி சாஸ்தா கோயில் மலை, திம்மரசநாயக்கனுார், புள்ளிமான்கோம்பை, பழையகோட்டை, வேலப்பர் கோயில் சார்ந்துள்ள பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளன. தற்போது கோடை தாக்கம் அதிகரிப்பால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது.

ஆண்டிபட்டி:ஆண்டிபட்டியில் மலை சார்ந்துள்ள வனப்பகுதியில் இருந்து வன விலங்குகள் இரவில் தாகம் தீர்க்க தண்ணீர் தேடி தரைக்கு இறங்கி வருகின்றன.ஆண்டிபட்டி சாஸ்தா கோயில் மலை, திம்மரசநாயக்கனுார், புள்ளிமான்கோம்பை, பழையகோட்டை, வேலப்பர் கோயில் சார்ந்துள்ள பகுதிகள் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ளன. தற்போது கோடை தாக்கம் அதிகரிப்பால் வனப்பகுதியில் வறட்சி நிலவுகிறது. தண்ணீர் சுனைகள் பல இடங்களில் வற்றியதால் வன விலங்குகள் தாகம் தீர்க்க தண்ணீருக்கு தவிக்கின்றன. கரடி, காட்டுப்பன்றி போன்றவை இரவில் இரை தேடியும், தண்ணீருக்காகவும் தரைப்பகுதிக்கு வந்து செல்கின்றன. மலையை ஒட்டி உள்ள விவசாய நிலங்களில் கிடைக்கும் நீருக்காக இரவில் வந்து செல்வதாக பொதுமக்கள் தெரிவித்தனர். வன விலங்குகள் நடமாட்டத்தை கண்காணிக்கவும் அவற்றுக்கு தேவையான தண்ணீர் வசதி செய்து தரவும் வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X