தமிழ்நாடு

நிரம்பி மாறுகால் பாய்கிறது சோத்துப்பாறை அணை

Added : மே 05, 2021
Share
Advertisement
பெரியகுளம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணை மொத்த உயரமான 126.28 அடி நிரம்பி மறுகால் பாய்கிறது. வரகாநதியில் தண்ணீர் அதிகம் செல்வதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அணைக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் சோத்துப்பாறை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் தண்ணீர்

பெரியகுளம், பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணை நீர் பிடிப்பு பகுதியில் பெய்த கனமழையால் அணை மொத்த உயரமான 126.28 அடி நிரம்பி மறுகால் பாய்கிறது. வரகாநதியில் தண்ணீர் அதிகம் செல்வதால் கரையோர மக்களுக்கு பொதுப்பணித்துறையினர் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த அணைக்கு கொடைக்கானல் மலைப்பகுதி மற்றும் சோத்துப்பாறை நீர்பிடிப்பு பகுதியில் பெய்யும் மழையால் தண்ணீர் வருகிறது. பெரியகுளம் சுற்றுப்பகுதிகளில் 2865 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். 2020 அக். 26ல் அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது. மார்ச் 15 வரை வழங்கப்பட்டது. பெரியகுளம் பகுதி குடிநீருக்கு மட்டும் வினாடிக்கு 3 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. சாரல் மழையும், அவ்வப்போது கனமழையும் பெய்ததால் இம்மாதம் துவக்கத்திலிருந்தே நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று முன்தினம் நீர்மட்டம் 124.31 அடியாக இருந்தது.கன மழையால் நேற்று அதிகாலையில் அணைக்கு வினாடிக்கு 141 கனஅடி நீர் வரத்தினால் அணை முழுவதும் நிரம்பி அதே அளவு தண்ணீர் மறுகால் பாய்கிறது. மழையளவு 8 மி.மீ., இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கோடையில் அணை நிரம்பியது.இரண்டாம் கட்ட எச்சரிக்கைஅணை மறுகால் பாய்வதால் வராகநதியில் தண்ணீர் அதிகம் செல்கிறது. எனவே பெரியகுளம், மேல்மங்கலம், ஜெயமங்கலம் மற்றும் குள்ளப்புரம் வழியாக கடந்து செல்லும் வராகநதி கரையோரம் வசிக்கும் மக்கள் கவனமாக இருக்க வேண்டும் என பொதுப்பணித்துறையினர் இரண்டாம் கட்ட எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X