தமிழ்நாடு

ஆபத்து ராமநாதபுரத்தில் மக்களுக்கு காத்திருக்கும் : கட்டுப்பாடில்லாத கொரோனா நோயாளிகள்

Added : மே 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடில்லாமல் வெளியே நடமாடுவதால் மற்றவர்களுக்கும்பரவும் ஆபத்து அதிகரித்து உள்ளது.மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் 197 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது. மாவட்டத்தில் 8996 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதில் 7623 பேர் குணமடைந்துள்ளனர்.146 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு

ராமநாதபுரம்:ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் கட்டுப்பாடில்லாமல் வெளியே நடமாடுவதால் மற்றவர்களுக்கும்பரவும் ஆபத்து அதிகரித்து உள்ளது.

மாவட்டத்தில் நேற்று முன்தினம் மட்டும் 197 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுஉள்ளது. மாவட்டத்தில் 8996 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டதில் 7623 பேர் குணமடைந்துள்ளனர்.146 பேர் உயிரிழந்துள்ளனர். கடந்த ஆண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்ட போது, அந்தந்த பகுதிகளை அடைத்து போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர்.


இரண்டாம் அலை தாக்கம்

இப்போது அதிகரித்துள்ள நிலையில் இது போன்ற எந்த கட்டுப்பாடும் இல்லை. கொரோனா தொற்றில் பாதிக்கப்பட்டவர்கள் சர்வ சாதாரணமாக சாலைகளில் நடமாடுகின்றனர். ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை கொரோனா வார்டில் 171பேரும், பரமக்குடி அரசு மருத்துவமனையில் 49 பேர், தனியார் மருத்துவமனைகளில் 100 பேர், என 320 பேர் மட்டுமே மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுகின்றனர்.

அதே நேரம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் 907 பேர் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதுபோன்ற கொரோனா நோயாளிகளில் பலர் மக்கள் கூடும் இடங்கள், போக்குவரத்து மிகுந்த இடங்கள், கடைகளுக்கு தாராளமாக சென்று வருகின்றனர்.அதே போல் அரசு மருத்துவமனைகளிலும் முன்பு போல் நோயாளிகளுக்கு உணவு உள்ளிட்ட எந்த உதவிகளும் வழங்கப்படுவது இல்லை.

இதனால் பலர் வெளியே டீ சாப்பிட, உணவு அருந்த செல்லும் நிலை உள்ளது. இவர்களால் மக்களுக்கு கொரோனா தொற்று மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.கொரோனா நோயாளிகளை வெளியே செல்லாமல் வைத்திருக்க மாவட்ட நிர்வாகம், சுகாதாரத் துறையினர் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X