சம்பவம் செய்தி

தமிழ்நாடு

காப்பீடு விண்ணப்பம் ஊர்மாற்றி பதிவுவிவசாயிகள் இழப்பீடு பெறுவதில் சிக்கல்

Added : மே 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:நெற்பயிருக்கு காப்பீடுபெற விண்ணப்பிக்கும் போது, வங்கியில் ஆன்லைனில் ஊர் மாற்றி பதிவு செய்துள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.மாவட்டத்தில் கடலாடி,முதுகுளத்துார், திருவாடானை, ஆர்.எஸ்.,மங்கலம் பகுதிகளில் நெல்சாகுபடி நடக்கிறது.மழையால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீடு

ராமநாதபுரம்:நெற்பயிருக்கு காப்பீடுபெற விண்ணப்பிக்கும் போது, வங்கியில் ஆன்லைனில் ஊர் மாற்றி பதிவு செய்துள்ளதால் விவசாயிகளுக்கு இழப்பீடு கிடைக்காமல் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

மாவட்டத்தில் கடலாடி,முதுகுளத்துார், திருவாடானை, ஆர்.எஸ்.,மங்கலம் பகுதிகளில் நெல்சாகுபடி நடக்கிறது.மழையால் நெல் விளைச்சல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டு இழப்பீடு வழங்கப்படுகிறது.

ராமநாதபுரம் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மாவட்டச் செயலாளர் மயில்வாகனன் கூறுகையில், 'நெல்லுக்கு பயிர்காப்பீடு தொகையாக ஏக்கருக்கு ரூ. 8ஆயிரம் வரை வங்கி கணக்கில் நேரடியாக வழங்குகின்றனர். கடலாடி மீனங்குடி குரூப் விவசாயிகளை தவறாக பாதிப்பு இல்லாதஒரிவயல் குரூப்பில் சேர்த்து வங்கி பணியாளர்கள் ஆன்லைன் பதிவு செய்துள்ளனர். இதனால் காப்பீட்டு தொகை கிடைக்கவில்லை.

இதேபோல மாவட்டம்முழுவதும் 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். காப்பீடு நிறுவனம், வங்கிநிர்வாகம் இணைந்து தவறை சரிசெய்து இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும்,' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X