சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கொரோனா நோயாளிகளுக்காக ராமநாதபுரம் சீமாங் சென்டரில் கூடுதலாக 400 படுக்கைகள்

Added : மே 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:கொரோனா நோயாளிகளுக்காக ராமநாதபுரத்தில் 400 ஆக்சிஜன் படுக்கைகள்கூடுதலாக அமைக்கப்பட உள்ளன.கடந்த ஆண்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகள், பரமக்குடி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள், சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 240 படுக்கைகள் என 640 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டது. தற்போது நோயாளிகள் அதிகரிப்பதால் ராமநாதபுரம்

ராமநாதபுரம்:கொரோனா நோயாளிகளுக்காக ராமநாதபுரத்தில் 400 ஆக்சிஜன் படுக்கைகள்கூடுதலாக அமைக்கப்பட உள்ளன.

கடந்த ஆண்டு ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 300 படுக்கைகள், பரமக்குடி அரசு மருத்துவமனையில் 100 படுக்கைகள், சிவகங்கை மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 240 படுக்கைகள் என 640 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்காக அமைக்கப்பட்டது.

தற்போது நோயாளிகள் அதிகரிப்பதால் ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் 600 படுக்கைகள், பரமக்குடியில் 200 படுக்கைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களில் 500 படுக்கைகள், தனியார் மருத்துவமனைகளில் 200 படுக்கைகள் என 1500 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இவற்றில் 1300 படுக்கைகள் ஆக்சிஜன்வசதி கொண்டவை.

இந்நிலையில், கொரோனா நோயாளிகளுக்கு கூடுதல் படுக்கை வசதி ஏற்படுத்துவது குறித்து கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் பிப்.,ல் ரூ.18 கோடியில் கட்டி திறக்கப்பட்டுள்ள நவீன சீமாங் சென்டரை ஆய்வு நேற்று செய்தார்.அவர் கூறியதாவது:

கொரோனா நோயாளிகள் அதிகரிப்பதால் புதிதாகஆக்சிஜன் வசிதியுடன் கூடிய 400 படுக்கை களை இந்த புதிய சீமாங்சென்டரில் அமைக்கஉள்ளோம்.ஏற்கனவே 1500 படுக்கைகள் உள்ள நிலையில் இதனையும் சேர்த்து 1900 படுக்கைகள் ஏற்படுத்தப்படும். இதில் 1700 படுக்கைகள் ஆக்சிஜன் வசதி கொண்டதாக இருக்கும், என்றார்.டீன் அல்லி, கண்காணிப்பாளர் ஜவஹர், டாக்டர்கள் மலையரசன், கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் உடன் சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X