தொழிலாளர்கள் அதிருப்தி

Added : மே 05, 2021
Share
Advertisement
மதுரை, மதுரையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ரெகுலர் வார விடுப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் அதிருப்தியில் உள்ளனர். இங்கு 14 போக்குவரத்து கிளை அலுவலகங்களில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில் நுட்ப அலுவலர்கள் உள்ளனர். இவர்களுக்கு திங்கள் - சனி ஏதாவது ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய வாரவிடுப்பு

மதுரை, மதுரையில் அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்ட ரெகுலர் வார விடுப்பு தற்காலிகமாக நிறுத்தப்பட்டதால் அதிருப்தியில் உள்ளனர்.
இங்கு 14 போக்குவரத்து கிளை அலுவலகங்களில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட டிரைவர்கள், கண்டக்டர்கள் மற்றும் தொழில் நுட்ப அலுவலர்கள் உள்ளனர்.
இவர்களுக்கு திங்கள் - சனி ஏதாவது ஒரு நாள் சம்பளத்துடன் கூடிய வாரவிடுப்பு வழங்கப்படுகிறது. தற்போது ஞாயிறு பொது ஊரடங்காக அரசு
அறிவித்ததால் ரெகுலர் வாரவிடுப்பை தற்காலிகமாக ரத்து செய்து அனைவரும் ஞாயிறு மட்டும் விடுப்பு எடுத்துக் கொள்ள அதிகாரிகள் வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளனர்.
தொழிலாளர்கள் கூறுகையில், 'கொரோனா தொற்றின் சவாலுக்கு இடையே பணிபுரியும் எங்களுக்கு இந்த முடிவு அதிருப்தியளிக்கிறது. சங்கங்கள் ரீதியாக நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளோம்,' என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X