பொது செய்தி

தமிழ்நாடு

ராமேஸ்வரம் கடலில் குவிந்த கடல் பாசிகள்

Added : மே 05, 2021
Share
Advertisement
ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஒதுங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் கடல் பாசிகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின், கோயில் வளாகத்திற்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவர். தற்போது கொரோனாவால் கோயில் மூடியதால், தினமும் குறைவான பக்தர்கள்
 ராமேஸ்வரம் கடலில் குவிந்த கடல் பாசிகள்

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கோயில் அக்னி தீர்த்த கடற்கரையில் ஒதுங்கி சுகாதாரக்கேடு ஏற்படுத்தும் கடல் பாசிகளை நகராட்சி ஊழியர்கள் அகற்றி சுத்தம் செய்தனர்.
ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் அக்னி தீர்த்த கடலில் நீராடிய பின், கோயில் வளாகத்திற்குள் உள்ள 22 தீர்த்தங்களில் நீராடுவர். தற்போது கொரோனாவால் கோயில் மூடியதால், தினமும் குறைவான பக்தர்கள் அக்னி கடலில் நீராடி, கோபுர தரிசனம் செய்து செல்கின்றனர்.இப்புனித தீர்த்த கடலில்ஒதுங்கும் பிளாஸ்டிக் கழிவுகள், துணிகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் அகற்றி, சுகாதாரம் பராமரித்து வருகின்றனர்.

கோடை வெயில் சீசனுக்கு நடுக்கடலில் வளரும் கடல் பாசிகள் முதிர்ச்சியில் பெயர்ந்து, ராமேஸ்வரம் கடலோரத்தில் ஒதுங்குகிறது. அக்னி தீர்த்த கடற்கரையில் ஒதுங்கும் பாசிகளால், அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசி சுகாதார கேடு ஏற்பட்டதால், பக்தர்கள் சிரமப்படுகின்றனர்.நேற்று நகராட்சி ஊழியர்கள் கடல் பாசிகளை அகற்றி, அக்னி தீர்த்த கடற்கரையை சுத்தம் செய்ததும், பக்தர்கள் திருப்தியுடன் நீராடி சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X