பொது செய்தி

தமிழ்நாடு

112 கடைகளுக்கு அபராதம்

Added : மே 05, 2021
Share
Advertisement
ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகராட்சி சார்பில், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 112 கடைகளுக்கு தலா ரூ.500 முதல் ரூ.5000ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.ராமநாதபுரம் நகரில் மட்டும் கொரோனா தொற்றுநோயால் இதுவரை 116 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4 பேர் இறந்துள்ளனர், 101 பேர் சிகிச்சையில் உள்ளனர். பரவலை கட்டுப்படுத்த போலீசார், சுகாதாரப்பணியாளர் அடங்கிய 3 குழுக்கள்

ராமநாதபுரம்:ராமநாதபுரம் நகராட்சி சார்பில், கொரோனா பரவல் தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாத 112 கடைகளுக்கு தலா ரூ.500 முதல் ரூ.5000ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

ராமநாதபுரம் நகரில் மட்டும் கொரோனா தொற்றுநோயால் இதுவரை 116 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். 4 பேர் இறந்துள்ளனர், 101 பேர் சிகிச்சையில் உள்ளனர். பரவலை கட்டுப்படுத்த போலீசார், சுகாதாரப்பணியாளர் அடங்கிய 3 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழு மூலம் முகக்கவசம் அணியாத 116 பேருக்கு தலா ரூ.200 மற்றும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றாத 112 கடைகளுக்கு தலா ரூ.500 முதல் ரூ.5000 வரை அபராதம் விதிக்கப் பட்டு உள்ளது. தொடர்ந்து விதிகளை பின்பற்றவில்லை என்றால் கடைகளை பூட்டி 'சீல்' வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நகராட்சி அதிகாரிகள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X