சம்பவம் செய்தி

தமிழ்நாடு

எஸ்.பி.பட்டினத்தில் மணல் திருட்டு அதிகரிப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
திருவாடானை:தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் பாம்பாற்றில் மணல் திருட்டு அதிகரித்துள்ளது.தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் பாம்பாறு உள்ளது. தேவகோட்டையிலிருந்து எஸ்.பி.பட்டினம் வழியாக கடலுக்கு செல்லும் இந்த ஆற்றில் மணல் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கிருந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லை இரண்டு கி.மீ. துாரத்தில் ஆரம்பமாவதால் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள்

திருவாடானை:தொண்டி அருகே எஸ்.பி.பட்டினம் பாம்பாற்றில் மணல் திருட்டு அதிகரித்துள்ளது.

தொண்டி அருகே எஸ்.பி.பட்டினத்தில் பாம்பாறு உள்ளது. தேவகோட்டையிலிருந்து எஸ்.பி.பட்டினம் வழியாக கடலுக்கு செல்லும் இந்த ஆற்றில் மணல் திருட்டு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இங்கிருந்து புதுக்கோட்டை மாவட்ட எல்லை இரண்டு கி.மீ. துாரத்தில் ஆரம்பமாவதால் அந்த மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இரவில் ஓரியூர் பாலம் அருகே உள்ள ஆற்றில் லாரிகள் மூலம் மணல் திருடி செல்கின்றனர்.

எஸ்.பி.பட்டினம் பகுதி மக்கள் கூறியதாவது:மணல் குவாரி இல்லாததால் திருவாடானை தாலுகாவில் கட்டுமானம் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முடங்கியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி தோமாயாபுரம், சிறுகம்பையூர், நீர்க்குன்றம், எஸ்.பி.பட்டினம் வழியாகசெல்லும் பாம்பாற்றில்மணல் திருடி அதிக விலைக்கு விற்கின்றனர்.மணல் அள்ளும் இயந்திரங்கள் மூலம் திருடப்படுவதால் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதால் கனிமவளம், வருவாய்த்துறை மற்றும் போலீசார் தக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X