சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பெண் கொலையில் ஒருவர் கைது

Added : மே 05, 2021
Share
Advertisement
வாடிப்பட்டி,வாடிப்பட்டி சி.புதுார் தமிழ்செல்வி 31. இவரது கணவர் தமிழ்மணி 2 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.ஏப்., 23 வாடிப்பட்டி சென்றவர் வீடு திரும்பவில்லை. மேட்டுப்பெருமாள்நகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் ஏப்., 27 கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த பெண் சடலம் தமிழ்செல்வி என தெரிந்தது.இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் தலைமையில்

வாடிப்பட்டி,வாடிப்பட்டி சி.புதுார் தமிழ்செல்வி 31. இவரது கணவர் தமிழ்மணி 2 ஆண்டுகளுக்கு முன் இறந்தார். மூன்று ஆண் குழந்தைகள் உள்ளனர்.
ஏப்., 23 வாடிப்பட்டி சென்றவர் வீடு திரும்பவில்லை. மேட்டுப்பெருமாள்நகர் நான்கு வழிச்சாலை சர்வீஸ் ரோட்டில் ஏப்., 27 கொலை செய்யப்பட்டு அழுகிய நிலையில் கிடந்த பெண்
சடலம் தமிழ்செல்வி என தெரிந்தது.
இன்ஸ்பெக்டர் சில்வியா ஜாஸ்மின் தலைமையில் போலீசார் விசாரித்தனர். போடிநாயக்கன்பட்டி மைக்செட் ஊழியர்
லட்சுமணனுடன் 40, தமிழ்செல்வி பழகியது தெரிந்தது.
இவர்களுக்குள் கொடுக்கல்- வாங்கல் தகராறில் ஏப்.,23 ஆண்டிபட்டி பெரியாறு கால்வாய் கரையில் வைத்து லட்சுமணன் கயிற்றால் தமிழ்செல்வி கழுத்தை நெரித்து கொலை செய்து சர்வீஸ் ரோட்டில் வீசியது தெரிந்தது. லட்சுமணனை போலீசார் கைது செய்தனர். இவருக்கு மனைவி, இரு மகள்கள் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X