பொது செய்தி

தமிழ்நாடு

மின் கசிவு தீ விபத்து தடுப்பது குறித்து கலந்துரையாடல்

Added : மே 05, 2021
Share
Advertisement
மதுரை துரையில் மாவட்ட மருத்துவமனை உட்பட முக்கிய இடங்களில் மின்கசிவால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்த கலந்துரையாடல் நடந்தது.குஜராத்தில் மே 1 ல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 கொரோனா நோயாளிகள் இறந்தனர். இதுபோல் மதுரையில் நடக்க கூடாது என்பதற்காக கடந்த மாதம் தீயணைப்பு துறை சார்பில் அரசு, தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு

மதுரை துரையில் மாவட்ட மருத்துவமனை உட்பட முக்கிய இடங்களில் மின்கசிவால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்த கலந்துரையாடல் நடந்தது.
குஜராத்தில் மே 1 ல் தனியார் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் 16 கொரோனா நோயா
ளிகள் இறந்தனர்.
இதுபோல் மதுரையில் நடக்க கூடாது என்பதற்காக கடந்த மாதம் தீயணைப்பு துறை சார்பில் அரசு, தனியார் மருத்துவமனை நிர்வாகிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. இதன் தொடர்ச்சியாக நேற்று கலந்துரையாடல் நடந்தது.
தென்மண்டல தீயணைப்பு துறை துணை இயக்குனர் விஜயகுமார் தலைமை வகித்தார். மாவட்ட அலுவலர் வினோத் முன்னிலை வகித்தார். உதவி
அலுவலர் செழியன் வரவேற்றார். சிறப்பு விருந்தினராக பங்கேற்ற மின்
வாரிய மண்டல பாதுகாப்பு பொறியாளர் கொண்டல்ராஜ், மின்சாரத்தால் ஏற்படும் தீ விபத்தை தடுப்பது குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் பேசினார். அரசு, தனியார் மருத்துவமனையைச் சேர்ந்தோர் பங்கேற்றனர். உதவி
அலுவலர் பாண்டி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X