சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்

Added : மே 05, 2021
Share
Advertisement
விபத்தில் மூதாட்டி பலிமேலுார்: வெள்ளலுார் காமாட்சி 70, நேற்று முன் தினம் கோட்டநத்தாம்பட்டி ரோட்டோரத்தில் கீழே விழுந்து கிடந்த புளிய மரத்தின் பழங்களை சேகரித்தார். பின்னால் வந்த டூவீலர் மோதி மூதாட்டி இறந்தார். கீழவளவு போலீசார் டூவீலர் ஓட்டி வந்த மதுரை ஹேமலதாவிடம் 28, விசாரிக்கின்றனர்.ஊராட்சி தலைவரை தாக்க முயற்சிமேலுார்: பூஞ்சுத்தி ஊராட்சி தலைவர் ராமநாதன் 45, பக்கத்து

விபத்தில் மூதாட்டி பலி
மேலுார்: வெள்ளலுார் காமாட்சி 70, நேற்று முன் தினம் கோட்டநத்தாம்பட்டி ரோட்டோரத்தில் கீழே விழுந்து கிடந்த புளிய மரத்தின் பழங்களை சேகரித்தார். பின்னால் வந்த டூவீலர் மோதி மூதாட்டி இறந்தார். கீழவளவு போலீசார் டூவீலர் ஓட்டி வந்த மதுரை ஹேமலதாவிடம் 28, விசாரிக்கின்றனர்.
ஊராட்சி தலைவரை தாக்க முயற்சி
மேலுார்: பூஞ்சுத்தி ஊராட்சி தலைவர் ராமநாதன் 45, பக்கத்து வீட்டு உறவினர்கள் மதுபோதையில் தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றதாக ஊராட்சி தலைவர் கொடுத்த புகாரின்படி
கண்ணன் 65, அர்ஜுன் 40, ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
டூவீலர் விபத்தில் லாரி டிரைவர் பலி
விக்கிரமங்கலம்: மதுரை பெத்தானியாபுரம் லாரி டிரைவர் செல்வம் 44. இவர் விக்கிரமங்கலம் ரெட்டியபட்டியில் பாட்டி இறப்பிற்கு நேற்று முன்தினம் டூவீலரில் (ஹெல்மெட் அணிய
வில்லை) சென்று திரும்பினார். அரசமரத்துபட்டி அருகே டூவீலர் நிலை தடுமாறி சாலையோர டெலிபோன் கம்பத்தில் மோதி செல்வம் இறந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.
வீடு இடிந்து பெண் பலி
திருமங்கலம்: தங்களாசேரி அருந்ததியர் காலனி பாண்டியம்மாள் 59. இப்
பகுதியில் பெய்த மழைக்கு இவர் வசித்து வந்த அரசு ஒதுக்கிய தொகுப்பு வீடு இடிந்து விழுந்தது. இதில் அவர் பலியானார். போலீசார், வருவாய்த்
துறையினர் விசாரிக்கின்றனர்.
நகை திருடியவர் கைது
திருமங்கலம்: நாகசாமிநகர் நிறைமதி 51, தனியார் பள்ளியில் வேலை
செய்கிறார். இவரது மகனுக்கு
திருமண ஏற்பாடுகள் நடந்த நிலையில் வீட்டிற்கு கூலி ஆட்களை வைத்து வெள்ளை அடித்தார். பீரோவில் இருந்த 5 பவுன் தங்கநகைகள் திருடு
போனது. இதில் ஈடுபட்டதாக வெள்ளை அடித்த கூளையாபுரம் புஷ்பராஜை 43, கைது செய்த போலீசார் நகைகளை
மீட்டனர்.
வீட்டில் திருட்டு
மதுரை: சம்மட்டிபுரம் செல்வி 58.
அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்ற நிலையில், இவரது
வீட்டில் இருந்து 12 பவுன் நகைகள், ரூ.2 ஆயிரம் திருடப்பட்டது.
எஸ்.எஸ்.காலனி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X