சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பரமக்குடியில்கொரோனா அதிகரிப்பு: வீரியத்தை உணராத மக்கள்

Added : மே 05, 2021
Share
Advertisement
பரமக்குடி:பரமக்குடியில் கொரோனா 2வது அலை ஆரம்பித்த நாள் தொடங்கி, நேற்று வரை 175 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 67 பேர் குணம் அடைந்துள்ளதுடன், 3 பேர் மரணமடைந்துள்ளனர்.தற்போது 51 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதுடன், 37 பேர் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் மருத்துவ மனை களை தவிர, பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி
 பரமக்குடியில்கொரோனா அதிகரிப்பு: வீரியத்தை உணராத மக்கள்

பரமக்குடி:பரமக்குடியில் கொரோனா 2வது அலை ஆரம்பித்த நாள் தொடங்கி, நேற்று வரை 175 பேர் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். இவர்களில் 67 பேர் குணம் அடைந்துள்ளதுடன், 3 பேர் மரணமடைந்துள்ளனர்.

தற்போது 51 பேர் வீடுகளில் தனிமைப் படுத்தப்பட்டுள்ளதுடன், 37 பேர் ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் மருத்துவ மனை களை தவிர, பரமக்குடி அரசு கலைக் கல்லுாரி சிறப்பு மருத்துவ முகாமில் 23 பேர் என 105 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

பரமக்குடியில் வேதாந்த மடத் தெரு, கருப்பணசாமி கோயில் தெரு சந்திப்பு பகுதியில் 8 பேர் வரை பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மேலும் பெருமாள் கோயில் தெரு, புதுநகர், வைகை நகர், பாலன் நகர், கனி நகர், எமனேஸ்வரம் பகுதி என பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X