சம்பவம் செய்தி

தமிழ்நாடு

செங்கல் சூளைக்காக பனை மரங்கள் வெட்டி அழிப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
சாயல்குடி:சாயல்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெருமளவு பனை மரங்கள் செங்கல் சூளைகளுக்காக வெட்டி அழிக்கப்படுகிறது.சாயல்குடி, நரிப்பையூர், ஐந்து ஏக்கர், கன்னிராஜபுரம், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், காவாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பனை மரங்கள் உள்ளன.40 முதல் 60 ஆண்டு நன்கு வளர்ந்த பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது.சாயல்குடி வி.வி.ஆர்.நகரைச் சேர்ந்த பனைத்
  செங்கல் சூளைக்காக பனை மரங்கள் வெட்டி அழிப்பு

சாயல்குடி:சாயல்குடி சுற்று வட்டார பகுதிகளில் பெருமளவு பனை மரங்கள் செங்கல்
சூளைகளுக்காக வெட்டி அழிக்கப்படுகிறது.

சாயல்குடி, நரிப்பையூர், ஐந்து ஏக்கர், கன்னிராஜபுரம், மேலச்செல்வனூர், கீழச்செல்வனூர், காவாகுளம் உள்ளிட்ட பகுதிகளில் பனை மரங்கள் உள்ளன.40 முதல் 60 ஆண்டு நன்கு வளர்ந்த பனை மரங்கள் வெட்டி அழிக்கப்பட்டு வருகிறது.

சாயல்குடி வி.வி.ஆர்.நகரைச் சேர்ந்த பனைத் தொழிலாளர் ராஜபாண்டியன் கூறியதாவது:ஒரு பனை மரம் வளர்ந்து பலன் தர 40 ஆண்டு ஆகிறது. 120 ஆண்டுகளுக்கு மேல் பயன் தரும் பனை மரங்கள் தற்போது அழிக்கப்படுவது கவலைக்குரியதாக உள்ளது.தற்போது பனைமரங்களை நட்டு மரங்களாக வளர்க்க முன்வருவதில்லை. இருக்கும் பனை மரங்களை காப்பாற்றினால் தான் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் நிலையாக இருக்கும்.

செங்கல் சூளைகளுக்காக ஒரு பனைமரம் ரூ.250 முதல் 350 வரை விற்கப்படுகிறது. மாவட்ட
நிர்வாகம் பனை மரங்களை அழிவிலிருந்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

கடலாடி தாசில்தார் சேகர் கூறியதாவது: அரசு புறம்போக்கு இடங்களில் பனை மரங்களை வெட்டுவதற்கு தடை உள்ளது. பட்டா நிலத்தில் வருவாய்த்துறையின் முறையான அனுமதி பெற்றுஇருக்க வேண்டும். பனை மரத்தை வெட்டி அழிப்பது குற்றமாகும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X