முழு ஊரடங்கு: இன்று பிரதமர் ஆலோசனை

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021 | கருத்துகள் (35)
Share
Advertisement
புதுடில்லி :நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், நம் நாட்டின் மருத்துவ நிபுணர்கள் பலரும், 'கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும்' என, வலியுறுத்திவருகின்றனர். காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும், முழு ஊரடங்கின் அவசியம் குறித்து வலியுறுத்தி
PM Modi, lockdown, curfew, முழு ஊரடங்கு, பிரதமர் ஆலோசனை

புதுடில்லி :நாடு முழுதும் கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருகிறது. வெளிநாடுகளைச் சேர்ந்த மருத்துவ நிபுணர்கள், நம் நாட்டின் மருத்துவ நிபுணர்கள் பலரும், 'கொரோனா பரவலை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கை அமல் படுத்த வேண்டும்' என, வலியுறுத்திவருகின்றனர்.


latest tamil news


காங்கிரஸ் எம்.பி., ராகுல் உள்ளிட்ட எதிர்க்கட்சி தலைவர்களும், முழு ஊரடங்கின் அவசியம் குறித்து வலியுறுத்தி வருகின்றனர். இரண்டாவது அலை துவங்கியபோது, 'அத்தியாவசிய தேவை ஏற்பட்டால் மட்டுமே முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும்' என, பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து, மத்திய அமைச்சர்களுடன், பிரதமர் மோடி, இன்று ஆலோசனை நடத்தவுள்ளதாக, மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன. இதில், முழு ஊரடங்கு தொடர்பாகவும் ஆலோசிக்கப்படும் என தெரிகிறது.

முழு ஊரடங்கை அமல்படுத்தினால், நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படும் என்பதால், அரசு தரப்பு தயங்குவதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (35)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-மே-202116:07:59 IST Report Abuse
Malick Raja நல்ல செய்திக்கு வேறொருவர் என்பது மட்டும் மாறா உண்மை .. மோடியண்ணன் சொன்னாலே அது மக்களுக்கு இன்னல்கள் நிறைந்ததாகவே இருக்கும் .. சிலருக்கு கிடைக்கும் இதுபோன்ற நிலைகளை மாற்றவே முடியாது
Rate this:
Cancel
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
08-மே-202113:50:04 IST Report Abuse
Malick Raja பொது முடக்கத்தால் பாதிப்பு அதிகமாகும் .. சிந்தித்தல் அவசியம் .. மக்களை திருத்தல் நிலைக்கு உட்படுத்தாமல் இப்படி அகோரமான முடிவுகலால் இழப்புக்கள் மட்டுமே இருக்கும் .. பொதுமுடக்கம் என்பது தேவையற்றதாகவே இருக்கவேண்டும் .. அதிலும் முழுப்பொதுமுடக்கம் முற்றிலும் மோசமான விளைவுகளையே கொடுக்கும்
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
06-மே-202112:33:56 IST Report Abuse
M  Ramachandran சில உண்மை கள் கசக்க தான் செய்யும். வேறு உபாயங்கள் / வழி தோன்றி நாள் கூறலாமே.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X