தடுப்புச்சுவர் பாலத்தால் விபத்து தவிப்பில் ஸ்ரீவி., ராமகிருஷ்ணாபுரம் மக்கள்

Updated : மே 05, 2021 | Added : மே 05, 2021
Share
Advertisement
ஸ்ரீவில்லிபுத்துார்:சுத்தமில்லாத வடமலைக்குறிச்சி சுடுகாடு, தாழ்வான தடுப்புச்சுவர் பாலத்தால் விபத்து அபாயம், சாக்கடைகளில் தேங்கிய கழிவுகளால் சுகாதாரக்கேடு, கொசு தொல்லை என பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் ராமகிருஷ்ணாபுரம் பகுதி மக்கள்.காமராஜர் சிலையிலிருந்து அரசு பஸ் டிப்போ வரை உள்ள ரோட்டில் வாகனங்கள் ஒழுங்கற்று நிறுத்தப்படுவதால்
 தடுப்புச்சுவர் பாலத்தால் விபத்து    தவிப்பில் ஸ்ரீவி., ராமகிருஷ்ணாபுரம் மக்கள்

ஸ்ரீவில்லிபுத்துார்:சுத்தமில்லாத வடமலைக்குறிச்சி சுடுகாடு, தாழ்வான தடுப்புச்சுவர் பாலத்தால் விபத்து அபாயம், சாக்கடைகளில் தேங்கிய கழிவுகளால் சுகாதாரக்கேடு, கொசு தொல்லை என பல்வேறு சிரமத்தை சந்தித்து வருகின்றனர் ஸ்ரீவில்லிபுத்துார் ராமகிருஷ்ணாபுரம் பகுதி மக்கள்.

காமராஜர் சிலையிலிருந்து அரசு பஸ் டிப்போ வரை உள்ள ரோட்டில் வாகனங்கள் ஒழுங்கற்று நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெருக்கடி காணப்படுகிறது. ரோட்டின் இருபுறமும் மணல் குவியலால் டூவீலர் ஓட்டிகள் சறுக்கி விழுகின்றனர். சாக்கடையில் கொட்டிக் கிடக்கும் கழிவுகளால் ரோட்டில் மழைநீர் தேங்குகிறது. வடமலைக்குறிச்சி சுடுகாடு கழிவுகள் தேங்கி சுகாதாரகேடுடன் காணப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கின்றனர்.

உயர்த்தி கட்டலாம்

இங்குள்ள பாலத்தில் தடுப்பு சுவர் உயரம் குறைந்து உடைந்து காணப்படுவதால் அவ்வழியாக நடந்து செல்பவர்கள் நிலை தடுமாறி ஓடையில் விழுகின்றனர். அதிவேகத்தில் வரும் டூவீலர் ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது.
செல்வகுமார்,

ரோட்டரி சங்க நிர்வாகி.

தேவை மின்மயானம்

வடமலைக்குறிச்சி சுடுகாடு சுத்தமில்லாமல் காணப்படுவதால் இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வருபவர்களுக்கு உடல் நலக்கேடு ஏற்படுத்துவதாக உள்ளது. இதை துாய்மைப்படுத்தி மின்மயானம் ஏற்படுத்த நகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சக்திவேல், சமூக ஆர்வலர்.

கழிவுகளை அள்ளுங்க

ரோட்டின் இருபுறமும் உள்ள சாக்கடையில் கழிவுகள் தேங்கி அடைபட்டு கிடக்கிறது.
மழைக்காலத்தில் ரோட்டில் கழிவு நீருடன் மழைநீர் தேங்க நடந்து செல்பவர்கள், வாகனத்தில் செல்பவர்கள் பாதிக்கின்றனர்.
- ராஜசேகர், தன்னார்வலர்.

சுத்தம் செய்யப்படும்

வடமலைக்குறிச்சி சுடுகாட்டில் அவ்வப்போது துாய்மைப்பணி நடைபெற்று வருகிறது. இதை உடனடியாக சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
- பிரமநாயகம், சுகாதார ஆய்வாளர்,

ஸ்ரீவில்லிபுத்துார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X