பொது செய்தி

தமிழ்நாடு

டாட்டா காட்டிய நோட்டா

Added : மே 05, 2021
Share
Advertisement
விருதுநகர்:மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் துக்கடா கட்சிகளுக்கு டாட்டா காட்டும் வகையில் நோட்டாவுக்கு (யாருக்கும் ஆதரவு இல்லை) 10 ஆயிரத்து 191 ஓட்டுக்கள் கிடைத்தன. மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி 6, ஒன்றில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள், சாத்துார் அ.ம.மு.க., வேட்பாளர் ராஜவர்மன் தவிர்த்து நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், சமத்துவ

விருதுநகர்:மாவட்டத்தில் ஏழு தொகுதிகளிலும் துக்கடா கட்சிகளுக்கு டாட்டா காட்டும் வகையில் நோட்டாவுக்கு (யாருக்கும் ஆதரவு இல்லை) 10 ஆயிரத்து 191 ஓட்டுக்கள் கிடைத்தன. மாவட்டத்தில் உள்ள 7 தொகுதிகளில் தி.மு.க., கூட்டணி 6, ஒன்றில் அ.தி.மு.க., வெற்றி பெற்றது.

அ.தி.மு.க., கூட்டணி வேட்பாளர்கள், சாத்துார் அ.ம.மு.க., வேட்பாளர் ராஜவர்மன் தவிர்த்து நாம் தமிழர் கட்சி, மக்கள் நீதி மய்யம், சமத்துவ மக்கள் கட்சி, புதிய தமிழகம் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர்கள் சொற்ப ஓட்டுக்கள் பெற்று டிபாசிட் தொகையை பறி கொடுத்தனர்.

விருதுநகர் 1,570, ராஜபாளையம் 1,868, சிவகாசி 1,727, ஸ்ரீவில்லிபுத்துார் 1,666, சாத்துார் 1,297, அருப்புக்கோட்டை 1,323, திருச்சுழி 740 என 10 ஆயிரத்து 191 ஓட்டுக்கள் நோட்டாவுக்கு கிடைத்தன.

நோட்டாவுக்கு கிடைத்த ஓட்டுக்கள் கூட சிறிய கட்சி வேட்பாளர்களுக்கு கிடைக்கவில்லை.அதிகபட்சமாக ராஜபாளையத்தில் 1,868, குறைந்தபட்சமாக அருப்புக்கோட்டையில் 740 ஓட்டுக்களை நோட்டா பெற்று துக்கடா கட்சிகளுக்கு டாட்டா காட்டி உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X