விருதுநகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் கேள்விக்குறியாகிறது சமூக இடைவெளி

Added : மே 05, 2021
Share
Advertisement
விருதுநகர்:விருதுநகர் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாயில் பகுதியை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் தடுப்பூசி போட வருவோர், சிகிச்சைக்கு வருவோர் சமூக இடைவெளிக்கு வழி இல்லாமல் போனது.விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் எதிர்புறம் நகர ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை

விருதுநகர்:விருதுநகர் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தின் வாயில் பகுதியை ஆக்கிரமிக்கும் வாகனங்களால் தடுப்பூசி போட வருவோர், சிகிச்சைக்கு வருவோர் சமூக இடைவெளிக்கு வழி இல்லாமல் போனது.

விருதுநகர் பராசக்தி மாரியம்மன் கோயில் எதிர்புறம் நகர ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இங்கு கர்ப்பிணிகள், முதியவர்கள், நோய்வாய்ப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. சிகிச்சை பெறுவோருக்கு மேல்சிகிச்சை தேவைப்பட்டால் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தற்போது இங்கு தடுப்பூசி போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. அரசு மருத்துவமனை யில் கூட்ட நெரிசலில் சிரமப்பட வேண்டாம் என கருதி பலர் நகர ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வருகின்றனர். ஆனால் இங்கோ சமூக இடைவெளி என்பது கேள்விக்குறியாக உள்ளது. இதன் வாயில் பகுதியை ஊழியர்கள், நோயாளிகள் டூவீலர்கள் ஆக்கிரமித்து நிறுத்தி உள்ளனர். இதனால் ஏற்படும் நெருக்கடியால் கொரோனா பரவும் மையமாக சுகாதாரமையம் மாறிவிடுமோ என அஞ்சுகின்றனர்.

இங்குள்ள வாகன ஆக்கிரமிப்புகளை அகற்றினாலே முன்புறம் விசாலமான இடம் கிடைக்கும். இதில் நோயாளிகளை காத்திருக்கும் பகுதியாக மாற்றினால் சுகாதார நிலையம் உள்ளே சமூக இடைவெளி ஏற்படும். வெளியில் நிறுத்தப்படும் வாகனங்களை அப்புறப்படுத்த போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X