பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திர மிளகாய் வத்தலுக்கு எதிர்ப்பு

Added : மே 05, 2021
Share
Advertisement
விருதுநகர்:விருதுநகரில் ஆந்திர மிளகாய் வத்தலை அனுமதிக்கக்கூடாது என நாட்டு மிளகாய் சாகுபடி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.மாவட்டத்தில் மானாவாரியாக நாட்டு மிளகாய் சாகுபடி பரவலாக நடக்கிறது. மூன்று மாத பயிரான நாட்டு மிளகாய் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது.குறைவான பூச்சி தாக்குதல், அதிக மழை பெய்யாமல் இருந்தால் பூக்கள் உதிராமல் காய்ப்பு நன்றாக இருக்கும்
 ஆந்திர மிளகாய் வத்தலுக்கு எதிர்ப்பு

விருதுநகர்:விருதுநகரில் ஆந்திர மிளகாய் வத்தலை அனுமதிக்கக்கூடாது என நாட்டு மிளகாய் சாகுபடி விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மாவட்டத்தில் மானாவாரியாக நாட்டு மிளகாய் சாகுபடி பரவலாக நடக்கிறது. மூன்று மாத பயிரான நாட்டு மிளகாய் வறட்சியை தாங்கி வளரும் தன்மை கொண்டது.குறைவான பூச்சி தாக்குதல், அதிக மழை பெய்யாமல் இருந்தால் பூக்கள் உதிராமல் காய்ப்பு நன்றாக இருக்கும் என்பது விவசாயிகளின் கணிப்பு.ஆந்திராவில் மானாவாரி பயிராக மிளகாய் அதிகளவு விளைவிக்கப்படுகிறது.

இதனால் உபரி மிளகாய்களை விருதுநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆந்திர மிளகாய் புரோக்கர்கள் அதிகளவு அனுப்புகின்றனர்.சத்துமிக்க நாட்டு மிளகாய்க்கு உரிய விலை கிடைக்காமல் உள்ளூர் விவசாயிகள் தவிக்கும் நிலையில்,ஆந்திர மிளகாய் வரத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

உன்னிபட்டி மிளகாய் விவசாயி பெரியசாமி:

ஆந்திர மிளகாய் வரவால் நாட்டு மிளகாய் கிலோ ரூ.11 மட்டுமே விலை கிடைக்கிறது. எனினும் புரோக்கர்கள் மூலம் விவசாயிகளிடம் இருந்து குறைந்த விலைக்கு வாங்கும் வியாபாரிகள் கிலோ ரூ.200 வரை விற்கின்றனர். இது தவிர்க்கப்பட வேண்டும். மிளகாய் வியாபாரிகளுக்கு நஷ்டம் ஏற்படாமல் தடுக்க நெல் கொள்முதல் போல் மிளகாயையும் அரசு கொள்முதல் செய்ய வேண்டும், என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X