பொது செய்தி

தமிழ்நாடு

விருதுநகரில் மழையுடன் துவங்கியது அக்னி வெயில்

Added : மே 05, 2021
Share
Advertisement
ராஜபாளையம்:அக்னி வெயில் துவங்கிய நேற்று விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் உட்பட பல பகுதிகளில் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் நீங்கி குளுமையான சூழல் நிலவியது.அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் மே 28 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுடன் கடந்த சில நாட்களாக வெயிலும் கொளுத்துவதால் மக்களும் காலை 11:00 மணிக்கு மேல் வெளியே நடமாட
  விருதுநகரில் மழையுடன்  துவங்கியது அக்னி வெயில்

ராஜபாளையம்:அக்னி வெயில் துவங்கிய நேற்று விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் உட்பட பல பகுதிகளில் பெய்த மழையால் வெயிலின் தாக்கம் நீங்கி குளுமையான சூழல் நிலவியது.

அக்னி நட்சத்திரம் துவங்கிய நிலையில் மே 28 வரை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுடன் கடந்த சில நாட்களாக வெயிலும் கொளுத்துவதால் மக்களும் காலை 11:00 மணிக்கு மேல் வெளியே நடமாட முடிவதில்லை.இந்நிலையில் அக்னி நட்சத்திரம் வேறு நேற்று முதல் துவங்கியதால் வெயில் அதிகளவில் வாட்டும் என பலரும் கருதினர்.

ஆனால் காலை முதலே வெயிலின்றி மழை மேக மூட்டத்துடன் காணப்பட்டது. மதியம் ஓரளவு வெயில் அதிகரித்த நிலையில்மாலை 4:30 முதல் 5:15வரை ராஜபாளையம் சுற்றுப்பகுதிகளில் மழை பெய்தது.இதே மழை மாவட்டத்தின் பல பகுதிகளிலும் நீடித்தது.

ஏற்கனவே சில நாட்களாக விட்டு விட்டு பெய்யும் கோடை மழையால் ஆறு, நீரோடைகளில் நீர் வரத்து உள்ளது. இதனால் கோடையிலும் கண்மாய்களிலும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளன. அக்னிநட்சத்திரம் துவங்கிய நாளில் பெய்த கோடை மழையால் மக்களும் ஓரளவு நிம்மதியடைந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X