கோடை மழையில் நிரம்பிய ஊரணிகள், குளங்கள்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கோடை மழையில் நிரம்பிய ஊரணிகள், குளங்கள்

Added : மே 05, 2021
Share
விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையின் கருணையால் நீர் நிலைகள், ஊரணிகள் நிரம்பிய நிலையில், விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.இந்தாண்டு பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல் மார்ச் வரை கோடை வெயில் வாட்டியது. ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் கோடை மழை தலை காட்டி வருகிறது. ஏப்ரல் இறுதி வரை நீடித்தது. இதை தொடர்ந்து மே துவக்கம் முதல் மாவட்டத்தில் சில
 கோடை மழையில் நிரம்பிய ஊரணிகள், குளங்கள்

விருதுநகர்:விருதுநகர் மாவட்டத்தில் பெய்து வரும் கோடை மழையின் கருணையால் நீர் நிலைகள், ஊரணிகள் நிரம்பிய நிலையில், விவசாயிகளை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.

இந்தாண்டு பிப்ரவரி இரண்டாவது வாரம் முதல் மார்ச் வரை கோடை வெயில் வாட்டியது. ஏப்ரல் இரண்டாவது வாரம் முதல் கோடை மழை தலை காட்டி வருகிறது. ஏப்ரல் இறுதி வரை நீடித்தது. இதை தொடர்ந்து மே துவக்கம் முதல் மாவட்டத்தில் சில நாட்களாக கோடை மழை கைகொடுத்து வருகிறது.

காட்டாற்று வெள்ளம் கரை புரண்டு ஓடியதால் கிராமங்களில் உள்ள நீர் நிலைகள், ஊரணிகள், குளங்களை மழை நீர் நிரப்பி வருகிறது. மானாவாரி சாகுடியை நம்பியுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியில் உள்ளனர். உள்ளூர் குடிநீர் தேவை, நிலத்தடி நீர் மட்டம் உயர்வு உள்ளிட்ட நன்மைகளும் கோடை மழையின் வரவால் கிடைத்துள்ளது.

ஜூனில் துவங்கும் பருவமழை கை கொடுத்தால் இந்தாண்டு குடிநீர் பிரச்னை இருக்காது, அதோடு விவசாயமும் செழிப்படையும் என்கின்றனர் விவசாயிகள்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X