தமிழ்நாடு

பாதிப்பு நமக்குதானே : கொரோனா தடுப்புக்கு இல்லை மக்கள் ஒத்துழைப்பு: முக கவசம் சமூக இடைவெளிகள் இன்றி நடமாட்டம்

Added : மே 05, 2021
Share
Advertisement
அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தராது, முககவசம் ,சமூக இடைவெளிகள் இன்றி நடமாடுவதால் அரசின் நோக்கம் அனைத்தும் வீணாகிறது.கொரோனா 2 ம் கட்ட அலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வருவாய் , போலீஸ், உள்ளாட்சி பணியாளர்கள் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அனைவரும் முக கவசம்
 பாதிப்பு நமக்குதானே :  கொரோனா தடுப்புக்கு இல்லை மக்கள் ஒத்துழைப்பு: முக கவசம்  சமூக இடைவெளிகள் இன்றி நடமாட்டம்

அருப்புக்கோட்டை:விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா முன் எச்சரிக்கை நடவடிக்கைளுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு தராது, முககவசம் ,சமூக இடைவெளிகள் இன்றி நடமாடுவதால் அரசின் நோக்கம் அனைத்தும் வீணாகிறது.

கொரோனா 2 ம் கட்ட அலை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. வருவாய் , போலீஸ், உள்ளாட்சி பணியாளர்கள் தடுப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வருகின்றனர். அனைவரும் முக கவசம் கட்டயாமாக அணிய வேண்டும், தேவையில்லாமல் வெளியில் வர கூடாது, சமூக இடைவெளியை கடை பிடிக்க வேண்டும் என தினமும் அறிவுறுத்தி வருகின்றனர். ஆனால் பொதுமக்கள் பெரும்பாலானோர் இதை பற்றி கவலைப்படுவது இல்லை.

போலீஸ்,அலுவலர்களால் மாஸ்க் இல்லாமல் வருவோருக்கு அபராதம் விதித்தாலும் எதையும் பொருட் படுத்தாமல் வலம் வருகின்றனர்.ஓட்டல் ,கடைகளில் பணிபுரிவோர் கையுறைகள், முக கவசம் அணிவதில்லை . பலசரக்கு கடைகளில் கூட்டமாக மக்கள் நின்று கொண்டிருந்தாலும் கடைக்காரர் கவலைப்படாமல் வியாபாரம் செய்கிறார்.

தனி மனித கட்டுப்பாடு இருந்தால் தான் கொரோனாவை வெல்ல முடியும். அரசு மருத்துவ மனைகளில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் சர்வ சுதந்திரமாக சுற்றி திரிகின்றனர். எந்தவித கட்டுப்பாடும் இல்லை. கொரோனா அறிகுறி உள்ளவர்கள் தனக்கு பாதிப்பு இருப்பது தெரிந்தாலும் சொல்லுவதில்லை. மருத்துவமனைக்கும் செல்வதும் இல்லை. பாதிப்பு அதிகமான பிறகு மருத்துவமனைக்கு செல்கின்றனர். அதற்குள் பல பேருக்கு பாதிப்பை உருவாக்கி விட்டு செல்கின்றனர். ் அரசு நடவடிக்கை எடுத்தாலும் பொதுமக்களும் கட்டுப்பாடுடன் இருந்தால் மட்டுமே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும்..........


சுய கட்டுப்பாடு அவசியம்



அரசுடன் பொதுமக்களும் ஓத்துழைக்க வேண்டும். தேவைப்பட்டால் மட்டும் வெளியில் வர வேண்டும். வாரம் 1 முறை கடைக்கு சென்று தேவையான மளிகை மற்ற பொருட்களை வாங்கி வைத்துக் கொள்ளலாம். அரசு சொல்லுகிற ஆலோசனைகளை கேட்டு தெளிவு பெறலாம். தேவையில்லாத பயத்தை தவிர்க்க வேண்டும்.

விஜயரங்கன்,

மூத்த வழக்கறிஞர் ,அருப்புக்கோட்டை

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X