பாலிதீன் பயன்பாடால் சாக்கடையில் தேங்கும் கழிவு நீர்

Added : மே 05, 2021
Share
Advertisement
பயன்பாடற்ற டிராபிக் சிக்னல்: சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டிராபிக் சிக்னல் பயன்பாடின்றி இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது. கருப்பு, சிவகாசி.சேதமடைந்த சுகாதாரவளாகம்: சாத்துார் பஸ் ஸ்டாண்டில் உள்ள சுகாதார வளாகம் சேதமடைந்துள்ளதால் இதை மூடிவைத்துள்ளனர். பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். ராம், சாத்துார்.புதர்மண்டிய வரத்துகால்வாய்: ராஜபாளையம் சந்தை

பயன்பாடற்ற டிராபிக் சிக்னல்:
சிவகாசி பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள டிராபிக் சிக்னல் பயன்பாடின்றி இருப்பதால் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வருகிறது.
கருப்பு, சிவகாசி.
சேதமடைந்த சுகாதாரவளாகம்:

சாத்துார் பஸ் ஸ்டாண்டில் உள்ள சுகாதார வளாகம் சேதமடைந்துள்ளதால் இதை மூடிவைத்துள்ளனர். பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
ராம், சாத்துார்.
புதர்மண்டிய வரத்துகால்வாய்:
ராஜபாளையம் சந்தை மார்க்கெட் பின்புறம் உள்ள நீர்வரத்து கால்வாய் புதர்மண்டி காணப்படுகிறது. புதர்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சாமி, ராஜபாளையம்.

மலைபோல் குப்பை:

அருப்புக்கோட்டை பழைய பஸ் ஸ்டாண்ட் பின்புறம் தட்டான்குளம் பகுதியில் மலை போல் குப்பை தேங்கி நிற்பதால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது.
நடராஜன்,அருப்புக்கோட்டை.

சாக்கடையால் விபத்து அபாயம்:

சிவகாசி தேரடி முக்கில் உள்ள சாக்கடை சேதமடைந்து உள்ளதால் இவ்வழியே செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் நிலை உள்ளது.
முனிஷ், சிவகாசி.

சாக்கடையில் பாலிதீன் குப்பை:

தாயில்பட்டி கே.கே.நகரில் சாக்கடையில் பாலிதீன் குப்பை அடைத்து கழிவுநீர் செல்ல வழியில்லாமல் தேங்கி நிற்கிறது.
மாதவன், தாயில்பட்டி.

கசிவால் வீணாகும் குடிநீர்: சிவகாசி வெள்ளையபுரத்தில் குடிநீர்குழாயில் ஏற்பட்டுள்ள கசிவால் தண்ணீர் வீணாகி வருகிறது. கசிவை சரி செய்ய வேண்டும்.
லட்சுமி, சிவகாசி.



ரியாக்ஷன்

கூமாபட்டி தைக்கா முஸ்லிம் தெருவில் உள்ள மின்கம்பத்தின் அடிப்பகுதி சேதமடைந்து கீழே விழும் நிலையில் காணப்பட்டது. ஏப். 27 ல் தினமலர் இன்பாக்ஸ் பகுதியில் போட்டோ வெளியானது. உடனடி நடவடிக்கையாக அங்கு புதிய மின்கம்பம் நடப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X