கோவையில் ஒரு லட்சம் ஓட்டு வாங்கிய நாம் தமிழர் வேட்பாளர்கள்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கோவையில் ஒரு லட்சம் ஓட்டு வாங்கிய நாம் தமிழர் வேட்பாளர்கள்

Added : மே 05, 2021 | கருத்துகள் (1)
Share
கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மட்டும், ஒருலட்சம் ஓட்டு வாங்கியுள்ளனர்.கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், 30 லட்சத்து, 82 ஆயிரத்து, 28 வாக்காளர்கள் இருக்கின்றனர். தபால் ஓட்டுகள் சேர்த்து, 21 லட்சத்து, 21 ஆயிரத்து, 685 ஓட்டுகள் பதிவாகின.இத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை தவிர்த்து, மக்கள் நீதி மய்யம் மற்றும்

கோவை:கோவை மாவட்டத்தில் உள்ள, 10 தொகுதிகளில், நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் மட்டும், ஒருலட்சம் ஓட்டு வாங்கியுள்ளனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள, 10 சட்டசபை தொகுதிகளில், 30 லட்சத்து, 82 ஆயிரத்து, 28 வாக்காளர்கள் இருக்கின்றனர். தபால் ஓட்டுகள் சேர்த்து, 21 லட்சத்து, 21 ஆயிரத்து, 685 ஓட்டுகள் பதிவாகின.இத்தேர்தலில் அ.தி.மு.க., - தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களை தவிர்த்து, மக்கள் நீதி மய்யம் மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுக்கும், நோட்டாவுக்கும் அதிகமான ஓட்டு பதிவாகியிருக்கிறது.அ.தி.மு.க., வேட்பாளர்களுக்கு, 9 லட்சத்து, 53 ஆயிரத்து, 776 ஓட்டுகளும், தி.மு.க., கூட்டணி வேட்பாளர்களுக்கு, 8 லட்சத்து,27 ஆயிரத்து, 240 ஓட்டுகளும் கிடைத்துள்ளன.

கமல் கட்சியான மக்கள் நீதி மய்ய வேட்பாளர்களுக்கு, ஒரு லட்சத்து, 87 ஆயிரத்து, 372 ஓட்டுகள் விழுந்துள்ளன. நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள், ஒரு லட்சத்து, 732 ஓட்டுகள் பெற்றுள்ளனர். கவுண்டம்பாளையம், சூலுார், கோவை வடக்கு, கிணத்துக்கடவு, மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட்ட வேட்பாளர்கள், 10 ஆயிரம் ஓட்டுக்கு அதிகமாக பெற்றுள்ளனர்.

சிங்காநல்லுார், தொண்டாமுத்துார், வால்பாறை,பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் களமிறங்கிய வேட்பாளர்கள், 5,000 ஓட்டுக்கு அதிகமாக பெற்றிருக்கின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களில், மிக அதிகமாக, கவுண்டம்பாளையத்தில் போட்டியிட்ட கலாமணி, 17,897 ஓட்டுகள் பெற்று, முதலிடத்தில் உள்ளார். கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட அப்துல் வகாப், 4,300 ஓட்டுகளேபெற்றுள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X