பொது செய்தி

தமிழ்நாடு

'அம்மா' உணவக பெயரை மாற்ற வேண்டாம்: பேரரசு

Added : மே 05, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
முதல்வராக பொறுப்பேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, திரைப்பட இயக்குனர் பேரரசு விடுத்துள்ள கோரிக்கை:ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, அவர் உருவாக்கிய சினிமா நகரத்துக்கு, ஜெ.ஜெ., பிலிம் சிட்டி என, பெயர் சூட்டினார். அதன்பின் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., பிலிம் சிட்டி என, பெயரை மாற்றினார்.உயிரோடு உள்ள தலைவரின் பெயரில், பிலிம் சிட்டி இருக்க வேண்டாம் என்ற
 'அம்மா' உணவக பெயரை  மாற்ற வேண்டாம்: பேரரசு

முதல்வராக பொறுப்பேற்க உள்ள, தி.மு.க., தலைவர் ஸ்டாலினுக்கு, திரைப்பட இயக்குனர் பேரரசு விடுத்துள்ள கோரிக்கை:

ஜெயலலிதா ஆட்சியில் இருந்த போது, அவர் உருவாக்கிய சினிமா நகரத்துக்கு, ஜெ.ஜெ., பிலிம் சிட்டி என, பெயர் சூட்டினார். அதன்பின் ஆட்சிக்கு வந்த கருணாநிதி, எம்.ஜி.ஆர்., பிலிம் சிட்டி என, பெயரை மாற்றினார்.உயிரோடு உள்ள தலைவரின் பெயரில், பிலிம் சிட்டி இருக்க வேண்டாம் என்ற காரணத்தால், அந்த முடிவு எடுக்கப்பட்டது. அதிலும், மற்ற எந்த தலைவரின் பெயரையும் வைக்காமல், அரசியல் எதிரியாக இருந்த, எம்.ஜி.ஆர்., பெயரையே வைத்தார் கருணாநிதி. இது, அவரது பெருந்தன்மையை காட்டியது.

அதேபோல, ஜெ., ஆட்சியில் உருவானது தான், அம்மா உணவகம். பலருக்கு குறைந்த விலையில், பசியை போக்கியது. ஜெ., உயிரோடு இல்லாத நிலையில், தற்போதைய தி.மு.க., ஆட்சியிலும், அம்மா உணவகம் என்ற பெயரிலேயே தொடர செய்யலாம்; அதன் வாயிலாக உங்களின் பெருந்தன்மையை மக்கள் உணர்வர்.'கலைஞர் உணவகம்' என, பெயர் மாறினால், அடுத்து வேறு யாராவது ஆட்சிக்கு வந்தால், மீண்டும் திட்டத்தின் பெயரை மாற்றுவர்.

இப்படித்தான் கலைஞர் காப்பீட்டு திட்டம் என்ற அற்புதமான திட்டம், அடுத்து வந்த ஆட்சியில் நிலை குலைந்து போனது.அம்மா உணவகத்தை அப்படியே தொடர செய்ய வேண்டும். இல்லையென்றால், அரசு உணவகம் என, பெயர் மாற்றலாம். இதனால், அடுத்து யார் ஆட்சிக்கு வந்தாலும் பெயர் மாறாது.கலைஞர் பெயரில் புதிய திட்டங்களை ஆரம்பிக்க, பல அம்சங்கள் உங்களிடம் இருக்கும். இது, ஒரு வேண்டுகோள் தான்.இவ்வாறு, பேரரசு கூறியுள்ளார்.
- நமது நிருபர் -

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
meenakshisundaram - bangalore,இந்தியா
11-மே-202105:11:00 IST Report Abuse
meenakshisundaram கண்டிப்பாக ஸ்டாலின் மாற்றமாட்டார் இன்னும் சிறிது காலத்துக்கு -அப்புறம் அதன் முன்பாக 'ராசாத்தி 'என்று சேர்த்து 'ராசாத்தி அம்மா 'உணவகம் என்று மாற்றுவார்
Rate this:
Cancel
திருஞானசம்பந்தமூர்த்திதாச ஞானதேசிகன் IT CANNOT BE ONE WAY DISPENSATION THEY NEITHER ALLOWED KARUNANITHI IN ASSEMBLY NOR ERECTED HIS PORTRAIT THERE
Rate this:
Cancel
spr - chennai,இந்தியா
08-மே-202118:27:58 IST Report Abuse
spr அஇஅதிமுக தொண்டர்களுக்கும் திமுக தொண்டர்களுக்கும் அம்மா என்பது மதிப்பிற்குரிய எனவே அம்மா மருந்தகம் அம்மா உணவகம் என்பதனையெல்லாம் மாற்ற வேண்டியதில்லை இரட்டை இலை, செல்வியின் படம் மட்டுமே பிரச்சினை என்றால் அதனை விலக்கிவிடலாம். இப்படி ஒரு வசதி செய்து கொடுத்தும் அக்கட்சி வெற்றி பெறவில்லை எனவே மக்கள் இதனால் எல்லாம் மனம் மாறுவதில்லை என்று தெளிவாகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X