அரசியல் செய்தி

தமிழ்நாடு

நோட்டாவை விட குறைந்த வித்தியாசத்தில் தோற்ற அமைச்சர்

Added : மே 05, 2021
Share
Advertisement
ஜோலார்பேட்டை:நோட்டாவை விட, குறைந்த வித்தியாசத்தில் அமைச்சர் வீரமணி தோற்றார்.திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க.,வில் அமைச்சர் வீரமணிக்கும், தி.மு.க.,வில் தேவராஜிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில், 1,091 ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் வீரமணி தோற்றார்.இத்தொகுதியில் நோட்டாவுக்கு, 1,337 ஓட்டுகள் கிடைத்தன. நோட்டாவை விட குறைந்த ஓட்டு வித்தியாசத்தில்

ஜோலார்பேட்டை:நோட்டாவை விட, குறைந்த வித்தியாசத்தில் அமைச்சர் வீரமணி தோற்றார்.

திருப்பத்துார் மாவட்டம், ஜோலார்பேட்டை தொகுதியில், அ.தி.மு.க.,வில் அமைச்சர் வீரமணிக்கும், தி.மு.க.,வில் தேவராஜிக்கும் கடும் போட்டி நிலவியது. இதில், 1,091 ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் வீரமணி தோற்றார்.இத்தொகுதியில் நோட்டாவுக்கு, 1,337 ஓட்டுகள் கிடைத்தன. நோட்டாவை விட குறைந்த ஓட்டு வித்தியாசத்தில் அமைச்சர் வீரமணி தோற்றார்.

மேலும், இங்கு பெயர் குழப்பத்தை ஏற்படுத்த வீரமணி பெயரில் மூன்று வீரமணிகள் போட்டியிட்டனர். அதில், ஏ. வீரமணி 148, எச். வீரமணி 209, எஸ்.வீரமணி, 217 ஓட்டுகள் என மொத்தம், 574 ஓட்டுகள் பெற்றனர்.

கடந்த, 2016ல் நடந்த தேர்தலில், அ.தி.மு.க.,வில் வீரமணி, 82,525 ஓட்டுக்கள் பெற்று, 10,991 ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ஆனால் கடந்த முறையை விட இந்த தடவை, 5,874 ஓட்டுகள் அதிகமாக பெற்றும், 1,091 ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X