மே.வங்க முதல்வராக இன்று மம்தா பதவியேற்பு?

Added : மே 05, 2021 | கருத்துகள் (37)
Share
Advertisement
கோல்கட்டா: மூன்றாம் முறையாக, மேற்கு வங்க முதல்வராக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, 5-ம் தேதி பதவி ஏற்கிறார்.மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது. இதையடுத்து, திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், மே.3 ம் தேதி நடந்தது. இதில், மம்தா
Mamata Banerjee, Mamata, West Bengal,மேற்கு வங்க முதல்வர்,  மம்தா, பதவியேற்பு?

கோல்கட்டா: மூன்றாம் முறையாக, மேற்கு வங்க முதல்வராக, திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி, 5-ம் தேதி பதவி ஏற்கிறார்.

மேற்கு வங்கத்தில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமுல் காங்., வெற்றி பெற்று, 'ஹாட்ரிக்' அடித்துள்ளது. இதையடுத்து, திரிணமுல் எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம், கோல்கட்டாவில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில், மே.3 ம் தேதி நடந்தது. இதில், மம்தா பானர்ஜியை புதிய முதல்வராக, எம்.எல்.ஏ.,க்கள் ஒருமனதாக தேர்வு செய்தனர்.


latest tamil news



இது குறித்து, கட்சியின் பொதுச் செயலர் பார்த்தா சட்டர்ஜி கூறியதாவது:மேற்கு வங்கத்தின் முதல்வராக, கட்சி தலைவர் மம்தா பானர்ஜி, மூன்றாம் முறையாக 5-ம் தேதி பதவி ஏற்கிறார். ஏற்கனவே சபாநாயகராக இருந்த பிமன் பானர்ஜி, இடைக்கால சபாநாயகராக இருந்து, எம்.எல்.ஏ.,க்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைப்பார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Parthasarathy Badrinarayanan - jakarta,இந்தோனேசியா
11-மே-202117:20:26 IST Report Abuse
Parthasarathy Badrinarayanan பாவம் மேற்குவங்க மக்கள். அவர்களை கொடுமைப்படுத்த உலகின் சிறந்த கொடுமைக்காரி கிடைத்துள்ளார்
Rate this:
Cancel
05-மே-202112:04:50 IST Report Abuse
ஸ்டாலின் :: உங்கள் சித்தாந்தம் என்றால் என்ன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு எந்த வகையிலாவது குடைச்சல் கொடுப்பதுதானே.உங்கள் சித்தாந்தம் மே.வங்கத்தில் நிறைவேறாது. மே.வங்க மக்கள் மம்தா கட்சிக்கு அறுதி பெரும்பான்மையை விட அதிமான இடங்கள் தந்து நிலையான ஆட்சிக்கு வழி வகுத்துவிட்டார்கள். நீங்கள் எப்படி குடைச்சலை கொடுத்தாலும் அதனை மம்தா வென்று காட்டுவார்.
Rate this:
Cancel
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது - வாழ்க தமிழ்",இஸ்ல் ஆப் மேன்
05-மே-202111:40:02 IST Report Abuse
மு.க.ஸ்டாலின், ‘பாதை புதிது பயணம் புதிது பிரதமராக இருந்து நாட்டில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நேரம் ஒதுக்கவில்லை. கட்சி தலைவராக இருபது முறைகள் ஒரு மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலுக்கு, பிரச்சாரம் செய்தார் மோடி. அதிலும் மாநில முதல்வரை தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்து தரம் தாழ்ந்து பேசினார். கட்சியின் தலைவர் என்று ஜே.பி. நட்டா இருந்தாலும், தனது உள்துறை அலுவலக வேலைகளை கவனிப்பதற்கு நேரமில்லாமல், மேற்கு வங்கத்திலேயே தனது நேரத்தை செலவிட்டார் அமித் ஷா. இது போதாதென்று கட்சியின் மற்ற தலைவர்கள், மத்திய அமைச்சர்கள் என்று பாஜக அனைத்துமே மம்தாவை வீழ்த்துவதற்கு பல தந்திரங்கள் செய்தன. அனைத்து தந்திரங்களையும் ஒரு பெண்மணியாக தனித்து நின்று வெற்றி கொண்டு சாதனை படைத்திருக்கிறார் மம்தா. அறுதி பெரும்பான்மையை பெறுவதில் சிக்கல்கள் இருந்தால், பாஜக தினமும் குடைச்சல் கொடுத்து கொண்டிருக்கும் என்பதை உணர்ந்த மேற்கு வங்க வாக்காளர்கள், மம்தாவின் ஆட்சிக்கு பாஜக எந்தவித குள்ளநரி தனமும் செய்து குடைச்சலை கொடுக்க கூடாது என்பதற்காக அறுதி பெரும்பான்மைக்கு மேலேயே மம்தாவுக்கு வெற்றி கனியை கொடுத்து அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு பாஜக மேற்கு வங்கத்தில் எந்தவித தொந்தரவும் கொடுக்க கூடாது என்று தீர்ப்பளித்து விட்டார்கள். மேற்கு வங்க மாநில வாக்காளர்களுக்கு மனம் நிறைந்த பாராட்டுக்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X